இடுகைகள்

பாரிஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காணாமல் போன ஆற்றை மீட்கும் நாடு! - வெப்பமயமாதல் பரிதாபம்

படம்
  காணாமல் போன ஆற்றை மீட்கும் பாரிஸ் நகரம்! இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், ஆண்டுதோறும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. வெப்பத்தைக் குறைக்கும் பல்வேறு யோசனைகளை முக்கிய நகர நிர்வாக அதிகாரிகள் செயல்படுத்த  முன்வந்துள்ளனர். அதில் ஒன்றுதான், காணாமல் போன ஆறுகளை மீட்பது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் பீவ்ரே (Bievre) என்ற ஆற்றை மீட்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளனர். 1899ஆம் ஆண்டு, பிரெஞ்சு பத்திரிகையான லே ஃபிகாரோவில் பீவ்ரே என்ற ஆறு பற்றி செய்தி ஒன்று வெளியானது. அதன்படி, பாரிஸின் தெற்குப் பகுதியிலிருந்து, நகரின் மையமான சீயின் (Seine) வரை (35 கி.மீ.) பீவ்ரே ஆற்றின் வழித்தடம் இருந்தது. இதன் அகலம் 13 அடி ஆகும். தொழிற்சாலைகள் அதிகரித்தபிறகு, ஆறு மாசுபடத் தொடங்கியது. ஆற்று நீர் அமிலங்கள், நிறமிகள், எண்ணெய் கலந்து கருப்பு நிறத்தில் ஓடியது என பத்திரிகையில் செய்தியே வெளியானது. மாசுபட்ட பீவ்ரே ஆற்றை முழுமையாக மூடிவிட, மக்கள் இசைந்தனர். எனவே,  அதிகாரிகளும் அதை ஏற்க, 1912ஆம் ஆண்டு ஆற்றின் வழித்தடத்தை முழுமையாக மூடினர்.   தற்போது பாரிஸ் நகரின் தோராய வெப்பநிலை, 2.3 டிகிரி செல்சியஸாக இருக்கிறத

சிறைக்கைதியை மீட்க அபாய போராட்டம் - வேய்ன் ஷெல்டன் அதிரடி!

படம்
ஒரு போராளி ஒரு ஜென்டில்மேன் வேய்ன் ஷெல்டன் தோன்றும் ஒரு பயணத்தின் கதை! துரோகத்தின் கதை ! லயன் காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் கலாக்ஜிஸ்தானில் நடைபெறும் விபத்து எப்படி முக்கியமான தொழிலதிபரின்(க்வெய்ல்) வணிக ஒப்பந்தத்திற்கு தடையாகிறது. இதற்கு காரணமான ஓட்டுநரை சிறையிலிருந்து மீட்க தொழிலதிபர் நினைக்கிறார். அதற்கு புகழ்பெற்ற ஷெல்டனை அழைக்கிறார்கள். ஷெல்டன் தன் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் செய்யநினைக்கிறார். ஆனால் தொழிலதிபரின் பி.ஏ. (கரினி) ஷெல்டனை ஏமாற்றி டபுள் கிராஸ் ஏஜெண்டாக மாறுகிறார். இதனால் நடக்கும் பிரச்னைகள், வன்முறைகள், துரோகங்களை ஷெல்டன் எப்படி சமாளித்து சிறையிலிருந்து ஓட்டுநரை மீட்கிறார் என்பதுதான் கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை தனி புத்தகமாக போட்டு எழுதலாம். திருடர்களுக்கும் ஷெல்டனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஷெல்டன் குழுவைத் தீர்த்துக்கட்ட நடக்கும் குறுக்கும் மறுக்குமான துரோக சம்பவங்களை கதையை சுவாரசியப்படுத்துகின்றன. கதையில் ஷெல்டன் தன் வயதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டுதான் சண்டையிடுகிறார். இதனால் நேரட

டென்மார்க்கை தோற்கடிக்க நினைக்கும் பாரிஸ்! - சைக்கிள் சவால்!

படம்
giphy.com சைக்கிள் சொர்க்கம் பாரிஸ்! 1980 களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட சைக்கிள் இன்று பாரிசில் அபரிமிதமாக பெருகியுள்ளன. காரணம், அரசு சூழலுக்கு ஏற்றபடி தன் சட்டங்களை மாற்றி வருவதும். அதற்கேற்ப மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இசைவாக இருப்பதும்தான். கடந்தாண்டு செப்டம்பர் 2018 முதல் நடப்பாண்டு 2019 வரையில் மட்டும் சைக்கிள்களின் 54 சதவீத த்திற்கும் அதிகமாகியுள்ளது. அரசு பல்வேறு இடங்களில் சைக்கிள்களை ஷேரிங் செய்வதற்கான வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் டென்மார்க்கின் கோபன்ஹேகன் சைக்கிள் சதவீதம் 62 ஆக உள்ளது. அந்த அளவை எட்ட இன்னும் மக்கள் சைக்கிள் மீது பாசம் காட்டி லட்சுமி, செல்லம்மா என செல்லம் கொஞ்ச வேண்டும். அவ்வளவேதான். ”இப்போது சைக்கிள் ஓட்டுபவர்களைப் பார்த்தால் உங்களுக்கு மாற்றம் நடந்திருப்பதுபோல தோன்றலாம். உண்மையில் காரில் செல்பவர்கள் யாரும் சைக்கிளை அதற்கு மாற்றாக எடுக்கவில்லை. எப்போதும்போல பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவர்கள்தான் சைக்கிளை கையில் எடுத்துள்ளார்கள். பிறரும் தங்களுக்கு ஏற்ற மாசு குறைவான வழியை தேர்ந்தெடுக்கின்றனர். ஒருவர் மட்டும்

உயிர் பிழைத்த தேனீக்கள்!

படம்
பிரான்சில் நோட்ரே டாமே தேவாலயத்தில் தீவிபத்து நடைபெற்றது.அதில் அங்கிருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் தேனீக்கள் தீ விபத்தில் மாட்டாமல் தப்பித்துள்ளதை உறுதி செய்துள்ளது பறவையியலாளர் குழு. இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நெருப்பு தேனீக்களை தீண்டவில்லை என்கிறார் நிக்கோலஸ் ஜீன்ட் என்ற தேனீவளர்ப்பாளர். அங்கு ஒரு கூட்டில் 60 ஆயிரம் தேனீக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் வாழ்ந்து வந்தன. சுவர், விட்டம் என அனைத்தும் தீயால் எரிந்து போனாலும் தேனீக்கள் பிரச்னையின்றி தப்பித்திருக்கின்றன. நகரம் முழுக்க 700 தேனீ வளர்ப்பிடங்கள் உள்ளன. கதீட்ரலில் மூன்று இருந்தன. கதீட்ரல் விபத்தானது நிச்சயம் வருத்தமான செய்திதான். அதேசமயம், தேனீக்கள் உயிர் பிழைத்தது எனக்கு மகிழ்ச்சி என்கிறார் நிக்கோலஸ்.  நன்றி: கார்டியன்