வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!
அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார். பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...