இடுகைகள்

இயற்கை வளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறைந்த விலையில் சோலார் பேனல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன!

படம்
  குறைந்த விலையில் சுடச்சுட சூரியன்!  சோலார் தகடுகள் மூலம் சூரிய ஆற்றலை சேமிப்பது முன்னர் இருப்பதை விட விலை குறைவானது . அடுத்த இருபது ஆண்டுகளில்  சூரிய சக்தியே முக்கியமான ஆற்றல் ஆதாரமாக இருக்கும் என உலக ஆற்றல் முகமை (IEA) கூறியுள்ளது.  உலக ஆற்றல் முகமை, தற்போது அமைக்கப்படும் சூரிய ஆற்றல் தகடுகளால் இத்துறை அடுத்த இருபது ஆண்டுகளில் 80 சதவீதம் வளரும் என்று கூறியுள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்படும் நிலக்கரிக்கு மாற்றாக முக்கியமான ஆற்றல் ஆதாரமாக 2025இல் சூரிய ஆற்றல் மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. குறைந்தவிலை என்பதால் முதலீட்டாளர்கள் இத்துறையில் முதலீடு செய்ய அதிகவாய்ப்புகள் உள்ளன. இதன் விளைவாக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் கூடலாம்.  1883ஆம் ஆண்டு முதன்முதலாக சோலார் பேனல் கண்டறியப்பட்டது. அப்போது சூரிய ஆற்றலைத் தேக்கும் திறன் 1-2 சதவீதமாக இருந்தது. பல்லாண்டு கால ஆராய்ச்சிகளால் ஆற்றலைத் தேக்கும் திறன் மெல்ல முன்னேறி வருகிறது. 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், சோலார் செல்களின் ஆற்றல் தேக்கும் திறன் 18.2 சதவீதமாக மேம்பட்டது. புதிய சாதனையாக 2019ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் இ