இடுகைகள்

லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனியாளாகப் போராடும் தொழிலதிபர்! - ரென் ஜெங்ஃபெய்

படம்
  நம்பிக்கையை சிதைத்த குற்றச்சாட்டு!   2019ஆம் ஆண்டு ஹூவெய் நிறுவனத்திற்கு கடுமையான சரிவு. அப்போது அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் இருந்தார். நீதித்துறை, ஹூவெய் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கனடாவில் இருந்த ரென்னின் மகள் மெங் வாங்சூவை விமானநிலையத்தில் கைது செய்து அவமானப்படுத்தினர்.   இதைப்பற்றி ரென் டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,  எனக்கு அமெரிக்கா ஊக்க சக்தியை அளித்த நாடு. எனது தொழில்சார்ந்த அறிக்கையில் கூட அதைக் குறிப்பிட்டுள்ளேன். இன்று எங்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட நான் அமெரிக்காவை வெறுக்கவில்லை. நாங்கள் சீன நாட்டில் செயல்படும் நிறுவனம்தான். அரசின் விதிகளுக்கு உட்பட்டு நிறுவனத்தை நடத்துகிறோம். நாங்கள் அமெரிக்க அரசு கூறுகிற குற்றச்சாட்டுப்படி, கொல்லைப்புற வழியாக பிற நாடுகளை உளவு பார்க்கிறோம் என்றால் இத்தனை நாடுகளில் நாங்கள் எப்படி பணியாற்ற முடியும். நாங்கள் 170 நாடுகளில் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறோம் என்றார்.   ரென், சீன மொழியில் தான் பேசுகிறார். அதை பிபிசி, டைம் ஆகிய ஊடகங்கள் மொழிபெ

இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள்! இந்தியா 75

படம்
  இந்தியாவின் முக்கியமான நிகழ்ச்சிகள் இந்தியா 75 டெலிவரிக்கு ரெடி!  உலகம் முழுக்க இன்று இந்தியாவின் சமையல் பொருட்களை பயன்படுத்தி வருகின்றன. இப்போது அந்த பொருட்கள் இல்லாமல் ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.  2020ஆம் ஆண்டு 275. 5 பில்லியன் மதிப்பிலான பொருட்களை உலகம் முழுக்க ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இதில் பெட்ரோல், எண்ணெய், வைரம், அரிசி, மருந்துகள், நகை, கார்கள் ஆகியவை உள்ளடங்கும். அமெரிக்கா, சீனா, அரபு நாடுகள் நமது முக்கியமான வாடிக்கையாளர்கள்.  எல்லோருமே எஞ்சினியர்கள்தான் இப்படி கிண்டல் செய்தாலும் கூட ஆசியாவில் சிறந்த பொறியாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், அரசு மானிய விலையில் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்து இருப்பதுதான். இதற்கான கட்டமைப்பு, நிதி ஆதாரம் எல்லாமே 1940 முதல் 50 களில் திட்டமிடப்பட்டது என்பதை யாரும் மறக்க கூடாது. வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் பெருமையை வெள்ளையர்களுக்கு புரிய வைத்து வென்றிருக்கிறார்கள் நமது எஞ்சினியர்கள்.  ஐடி ஆட்கள் ப்ரோ! ஐடி சார்ந்த சேவைகளை குறைந்த விலையில் அதிக தரத்துடன் செய்துகொடுப்பது இந்தியாதான். 1967ஆம் ஆண்டு த

சூரிய ஒளி, ஆக்சிஜன் பட்டால் மட்கிப்போகும் பிளாஸ்டிக்!

படம்
  செய்திஜாம் ஆஹா! மறுசுழற்சி! சூரிய ஒளி பட்டாலே மட்கும் வகையில் புதிய பிளாஸ்டிக் வகையை சீனாவின்  ஹூவாஸாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள தனித்துவமான மூலக்கூறுகள் ஒளி, தண்ணீர் பட்டால்  உடனே ஒரே வாரத்தில் மட்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படி மட்கும்போது சக்சினிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதனை மருந்து தயாரிப்பில் அல்லது உணவு உற்பத்தியில் பயன்படுத்தமுடியும். இந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  https://www.indiatimes.com/technology/science-and-future/plastic-sunlight-disintegration-one-week-544896.html வெள்ளத்தில் நகரம்! மழை வெள்ளத்தில் சாலைகள் மிதக்கும் காட்சி! இடம், ஜெர்மனி, பிளெஸ்ஸம் அப்படியா! பற்றாக்குறை! குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்ச்சியானார்கள். இதனால் அங்குள்ள 20 மாவட்டங்களில் 3000 கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர், கூடுதல் மாணவர்களை படிக்க வைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை, ஷிப்ட் முறை ஆகியவற்றை பின்பற்றலாம் என