இடுகைகள்

வனவிலங்குகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வனவிலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்!

படம்
  வன விலங்குகளை பாதுகாக்க உதவும் நாய்! மனிதர்களோடு வாழும் முக்கியமான உயிரினங்களில் நாயும் ஒன்று. ஆட்டு மந்தைகளுக்கு பாதுகாப்பு, வீடுகளுக்கு காவல், வேட்டையாடுவது என நாயின் பங்களிப்பு மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமானது. தற்போது காட்டுயிர் வாழ்க்கையைப் பாதுகாப்பதிலும் நாய் உதவிவருகிறது.  சட்டவிரோத கடத்தல் 2017ஆம் ஆண்டு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் சட்டவிரோத வேட்டையாடல் அதிகரித்து வந்தது. காட்டுயிர் பாதுகாப்புத்துறை, பென்னி என்ற லாப்ரடார் இன நாயை, கடத்தலைத் தடுக்க பணியமர்த்தினர். அப்போது, யானைத் தந்தம், சுறாமீன் துடுப்பு, காண்டாமிருக கொம்பு ஆகியவற்றை கடத்தல்காரர்கள் கடத்தி வந்தனர்.  மோப்பநாய் பென்னி, இவற்றை வேகமாக கண்டுபிடித்து தடுத்தது. ஆப்பிரிக்காவிலும்  சட்டவிரோத கடத்தலைத் தடுக்க மோப்பநாய்களையே பயன்படுத்துகின்றனர்.   கழுகுகளுக்கு விஷம் 2003ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டில்,  33 கழுகுகள் (Griffon,Cinereous,Royal kites) ஆட்டிறைச்சியில் வைக்கப்பட்ட விஷத்திற்கு பலியாயின. விஷம், காட்டுநாய்களைக் கொல்ல வைக்கப்பட்டது.  ஐரோப்பிய நாடுகளில் ஓநாய், கரடிகளைக் கொல்ல இறைச்சியில் விஷம் வைக்கப