இடுகைகள்

சீர்திருத்தங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயகத்தில் சீர்த்திருத்தங்கள் சாத்தியம்தான்! - சேட்டன் பகத்

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள்! முன்னால் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள் எளிதாக நடைபெறாது என்று கூறினார். அவர் அதை என்ன பொருளில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு என்ன காரணம் என யோசித்தால், இந்திய மக்களிடையே அரசு புதிய விஷயங்களை கொண்டு வரும்போது அதனை சந்தேகமாக பார்க்கிறார்கள். ஜிஎஸ்டி விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட வரி சீர்திருத்தம் அது. ஆனால் பாஜக காலத்தில் எந்த விழிப்புணர்வுமின்றி அமலானது. இன்றுவரையிலும் வரிவிகிதங்களைப் பற்றி மக்களுக்கும் புரியவில்லை. தொழிலதிபர்களுக்கும் எப்போது வரி கட்டவேண்டும் என்பதை ஆடிட்டர்கள் சொல்லும்போதுதான் புரிந்துகொள்கின்றனர். அரவிந்த் சுப்பிரமணியன், சீர்திருத்தங்கள் அமலாக அதிக காலம் எடுப்பதை கருத்தில் கொண்டு மேற்சொன்னது போல கூறியிருக்கலாம். அது உண்மைதான். இங்கு பல்வேறு சிந்தனை அமைப்புகள் உள்ளன. வரி சீர்திருத்தம் என்பது சரி, தவறு, பாதிப்பு என்ன என்பதை முன்னரே அடையாளம் காண இதுபோன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைவரின் குரல