இடுகைகள்

செல்வாக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிநபர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக செல்வாக்கும், அழுத்தங்களும்!

படம்
  மக்கள் கருத்தே நமது கருத்து இயக்குநர் ஷங்கர் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனால் அவரது படங்களில் பிராமணர்கள் விதியை மீறாத அப்பாவிகளாக நல்லவர்களாக வருவார்கள். ஆனால் கருப்பாக இருப்பவர்கள் சேரியில் இருப்பவர்கள் தவறான செயல்களை செய்பவர்கள் என காட்சிரீதியாக வலுவாக மக்களது மனதில் பதிய வைக்க முயல்வார். கூடவே ஊழல் என்றால் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்கள் லஞ்சம் வாங்குபவர்களாக, நேர்மை இல்லாதவர்களாக காட்டப்படுவார்கள். மிக மேலோட்டமான அரசியல் பார்வை கொண்ட படங்கள் அவை. மக்கள் கருத்துகளின்படி அரசு இயங்குவதாக காட்டுவார்கள். இதன் பின்னணி பற்றிய உளவியல் ஆய்வைப் பார்க்கலாம்.  பொதுவாக ஒருவரின் செயல்பாடு என்பது காலத்தை கடந்ததாக இருந்தால், அதை அடையாளம் கண்டு அங்கீகரிப்பவர்கள் மிக குறைவானவர்கள்தான். தொலைநோக்காக யோசித்து புதுமை செய்பவர்களை சமூகம் எப்போதும் கேலியும் கிண்டலும் அவமரியாதையும் செய்து வந்திருக்கிறது. புதிய செயலை செய்கிறோம் என்றால், அதை செய்யும்போது அதில் ஈடுபட்டுள்ள மனிதர்களின் தனிப்பட்ட கருத்து, அதைப்பற்றிய மக்களின் பொதுக்கருத்து  என நிறைய விஷயங்கள் உள்ளே வரும். முன்னர் சினிமாவைப் பார்த்தோ

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - அமீலியோ, பிளைண்ட், கிராபிகா

படம்
  அமீலியோ - சிறைக்கைதிகளுக்கான வீடியோ அழைப்பு டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023   நோவா நார்டிஸ்க் அமெரிக்க சந்தையில் நோவா நார்டிஸ்கின் ஆசம்பிக், ரைபெல்சஸ் ஆகிய மாத்திரைகளுக்கு கிராக்கி அதிகம். ஏனெனில் இந்த மாத்திரைகள் உடல் எடை குறைப்பிற்கானவை. இந்த மாத்திரைகளை இரண்டாம் நிலை நீரிழிவுக்கும் பயன்படுத்தலாம். நோவா மருந்து உற்பத்தி நிறுவனம், தனது மருந்துகளை எப்படி பயன்படுத்துவது, யாருக்கு பரிந்துரைப்பது என்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. உடல் எடை குறைப்பு சந்தை பெரியது. அதில் நோவாவின் மாத்திரைகளைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பவர்கள் அதிகம். அதையும் அந்த நிறுவனம் அறிந்திருக்கிறது. அல்சீமருக்கான மருந்துகள், சிகிச்சைகளை வழங்கவதற்கு திட்டமிட்டு வருகிறது. இதன் இயக்குநர் லார்ஸ் ஃப்ரூயர்கார்ட். #Nova nordisk கிராபிகா செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்படும் போலி செய்திகள், போலி புகைப்படங்கள், பிரசாரங்களை அலசி ஆராய்ந்து உண்மை என்ன என்பதை கிராபிகா கண்டுபிடிக்கிறது. இந்த நிறுவனம், அமெரிக்காவின்   நியூயார்க் நகரில் செயல்படுகிறது. 2022ஆம் ஆண்டு மெட்டா, கூகுள், ஸ்டான்ஃபோர்ட் பல்கல

டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - சீஃப், மெர்காடோ லிப்ரே, ஸ்பேஸ்எக்ஸ்

படம்
  நிதிசேவை நிறுவனம் - மெர்காடோ லிப்ரே சீஃப் - பெண்கள் முன்னேற்றம் ரீகுரோ வேளாண்மை சேவைகள் ஜேடி.காம் - இ வணிக சேவை நிறுவனம் டைம் செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 சீஃப் பெண்களுக்கான   உயர்வே நாட்டின் வளர்ச்சி நடப்பு ஆண்டில் மோர்கன் ஸ்டான்லி, ஐபிஎம் ஆகிய நிறுவனங்களில் பாலியல் பன்மைத்தன்மை கொண்ட லட்சியங்களை உருவாக்க உதவி வருகிறது. பொதுவாக பெண் தலைவர்கள் நிறுவனங்களில் உயர் பதவிகளை அடைவதற்கான பல்வேறு பயிற்சிகளை சீஃப் வழங்குகிறது. இனவெறி   சார்ந்த சில குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் கூட நிறுவனத்தின் மதிப்பு 700 மில்லியனாக உள்ளது. குழுக்களை அமைப்பது, முக்கியமான பெண் தலைவர்களை கூட்டி வந்து ஊக்கமூட்டும் சொற்பொழிவுகளை பேச செய்வது என ஊக்கமுடன் இயங்குகிறது. #chief       மெர்காடோ லிப்ரே லத்தீன் அமெரிக்கர்களுக்கு நிதியுதவி இலவசம் கிடையாது. கட்டண சேவைதான். நிதி உதவிகளை அள்ளித்தரும் லத்தீன் அமெரிக்க சேவை நிறுவனம். 2022ஆம் ஆண்டு பத்து பில்லியன் வருமானம் காட்டிய நிறுவனம், இதன் வளர்ச்சி 134 சதவீதமாக உள்ளது. செயல்பாட்டு நிதியாக ஒரு பில்லியன் டாலர்களைக் கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவில்

செல்வாக்கு பெற்ற நிறுவனங்கள் 2023 - மைக்ரோசாஃப்ட், பைடு, சாம்சங்

படம்
  பைடு, சீனா ஜேபி மோர்கன் சேஸ் சிஏடிஎல், சீனா லேண்ட் ஓ லேக்ஸ் லைவ் நேஷன் என்டர்டெயின்மென்ட் சத்யா நாதெள்ளா, மைக்ரோசாஃப்ட் இயக்குநர் மைக்ரோசாஃப்ட் செயற்கை நுண்ணறிவு உலகின் வாசல் மைக்ரோசாஃப்ட்   டெக் உலகில் இருக்கிறதா இல்லையா என பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று அதையெல்லாம் இயக்குநர் சத்யா நாதெள்ளா மாற்றியிருக்கிறார். ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அதை தன் வசப்படுத்தியிருக்கிறது மைக்ரோசாஃப்ட். இதன்மூலம் டெக் உலகில் கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்களை விலக்கி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளது. மைக்ரோசாஃப்ட், சாட் ஜிபிடியை தனது அனைத்து மென்பொருட்களுக்கும் விரிவுபடுத்தி வருகிறது. அதாவது, அதன் இணைய உலாவியான பிங் தொடங்கி ஆபீஸ் வரையில் அனைத்துமே இனி மாறிவிடும். மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்கும். டெக் வல்லுநர்கள் பயன்படுத்தி வந்த கிட்ஹப்பும் கூட மைக்ரோசாஃப்ட் வசம் சென்றுவிட்டது. எனவே, இதிலும் சாட்ஜிபிடியின் ஆதிக்கம் தொடங்கும். இதில் கோடிங் எழுதுவதற்கு பயன்படுத்தும் கோபைலட் என்ற கருவியை செயற்கை நுண்ணறிவு கொண்டு மேம்படுத்தவிருக்கிறார்கள். இந்த நடவடிக்கை கோடிங் எழு

டைம் இதழின் உலகின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021! - கண்டுபிடிப்பாளர்கள்

படம்
  செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021 ஜென்சென் ஹூவாங் என்விடியா நிறுவன இயக்குநர் 2003ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த நிறுவனம் கணினி விளையாட்டுகளை விளையாடுவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறது. இவர்  சிப் தயாரிப்புகளை நுட்பமாக்கி, அதில் செயற்கை நுண்ணறிவு சமச்சாரங்களை கூர்மைப்படுத்தினார். இதன் விளைவாக இன்று கணினியின் தொழில்நுட்பமும் நவீனமாகியுள்ளது. கூடுதலாக போன்  தானாகவே செயல்பட்டு பதில் கூறுவது, களைகளுக்கு மட்டும் பூச்சிமருந்து தெளிப்பது,  இந்த நோய்க்கு இந்த மருந்து என மருத்துவர்கள் பரிந்துரை செய்வது என பல்வேறு விஷயங்களுக்கும் சிப்களின் தொழில்நுட்பம் உதவுகிறது. இன்று உலகின் முக்கியமான தொழில்நுட்ப இயக்குநராக ஹூவாங் மாறியுள்ளார்.  டைம்  ஆண்ட்ரூ என்ஜி  எலன் மஸ்க் அமெரிக்க தொழிலதிபர் எலனை சுருக்கமாக தொழிலதிபர் என்று கூறிவிட முடியாது. இப்போதுதான் 2.9 பில்லியன்  மதிப்பிலான நாசாவின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். இவரை அமேசானின் ஜெப் பெசோஸ் விமர்சனத்தில் வறுத்தெடுத்தாலும் எலனைப் பொறுத்தவரை அதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. நான் தப்பு பண்ண பயப்பட மாட்டேன் என விஜய் ஆண்டனி பேசு