டைம் இதழின் உலகின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021! - கண்டுபிடிப்பாளர்கள்

 







செல்வாக்கு பெற்ற மனிதர்கள் 2021

ஜென்சென் ஹூவாங்

என்விடியா நிறுவன இயக்குநர்

2003ஆம் ஆண்டு என்விடியா நிறுவனத்தை தலைமைப் பொறுப்பை ஏற்றார். இந்த நிறுவனம் கணினி விளையாட்டுகளை விளையாடுவதற்கான பொருட்களை தயாரித்து வருகிறது. இவர்  சிப் தயாரிப்புகளை நுட்பமாக்கி, அதில் செயற்கை நுண்ணறிவு சமச்சாரங்களை கூர்மைப்படுத்தினார். இதன் விளைவாக இன்று கணினியின் தொழில்நுட்பமும் நவீனமாகியுள்ளது. கூடுதலாக போன்  தானாகவே செயல்பட்டு பதில் கூறுவது, களைகளுக்கு மட்டும் பூச்சிமருந்து தெளிப்பது,  இந்த நோய்க்கு இந்த மருந்து என மருத்துவர்கள் பரிந்துரை செய்வது என பல்வேறு விஷயங்களுக்கும் சிப்களின் தொழில்நுட்பம் உதவுகிறது. இன்று உலகின் முக்கியமான தொழில்நுட்ப இயக்குநராக ஹூவாங் மாறியுள்ளார். 

டைம் 

ஆண்ட்ரூ என்ஜி 





எலன் மஸ்க்

அமெரிக்க தொழிலதிபர்


எலனை சுருக்கமாக தொழிலதிபர் என்று கூறிவிட முடியாது. இப்போதுதான் 2.9 பில்லியன்  மதிப்பிலான நாசாவின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளார். இவரை அமேசானின் ஜெப் பெசோஸ் விமர்சனத்தில் வறுத்தெடுத்தாலும் எலனைப் பொறுத்தவரை அதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. நான் தப்பு பண்ண பயப்பட மாட்டேன் என விஜய் ஆண்டனி பேசுவது போன்ற குணம்தான் இவருடையதுதான். ராக்கெட் வெடிச்சிடுச்சா, அடுத்த ராக்கெட்டை ரெடி பண்ணுவோம் என உழைத்துக்கொண்டே இருக்கிறார். டெஸ்லா எலக்ட்ரிக் கார் கம்பெனி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டுகள், பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான நியூராலிங்க் ஆராய்ச்சி, போக்குவரத்திற்கான போரிங் கம்பெனி,  இணையசேவைக்கான ஸ்டார் லிங்க் கம்பெனி என இவரின் நிறுவனங்கள் அனைத்துமே நாம் சவாலாக நினைக்கும் அத்தனை விஷயங்களையும் தவிடுபொடியாக்கியவைதான். 

இவரின் தொடக்கம் பேபால் நிறுவனத்தை துணை நிறுவனராக தொடங்கியதுதான். அதை துணிச்சலாக விற்றுவிட்டு தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். தொழிலதிபராக மட்டுமல்ல, தலைவராகவும் எலன் மஸ்கிடம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. 

டைம்

அரியன்னா ஹஃபிங்டன்





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்