தோல்வியால் நிலைகுலையும் சீரியல் கொலைகாரர்கள்!

 






தோல்வி கொலைகளை தடுக்குமா?


சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை படத்தில் வருவது போலவே டன் கணக்கில் ஈகோ கொண்டவர்கள். இதனால் தோல்வி என்று வந்தால் கவலையில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிடுவார்கள். எப்போதும் செய்யும் விஷயத்தில் தோற்கவே கூடாது என நினைத்து அனைத்து விஷயங்களையும் செய்வார்கள். ஆனால் எப்படி அனைத்தும் வெற்றியடையும்? பெண்கள், பணம், வேலை என அனைத்தும் சுபமாக அவர்களிடம் இருந்தால்தான் விஷயங்களை கொஞ்சமேனும் திட்டமிட்டு செய்வார்கள். இல்லையெனில் எல்லாமே கஷ்டம்தான். 

நான் அவர்களை காயப்படுத்த நினைக்கவில்லை. கொல்லவே நினைத்தேன் என்று சீரியல் கொலைகாரர் டேவிட் பெர்கோவிட்ஸ் சொன்னதை திரும்ப திரும்ப படியுங்கள். அதில் அவரின் தொனி என்னவாக இருக்கிறது? அதேதான். இப்படித்தான் அவர்களின் மனநிலை இருக்கும். பிறரைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதுதான் இவர்களின் கொலைகளுக்கும், தாக்குதலுக்கும், வல்லுறவுக்கும் பின்னாலுள்ள ஒரே எண்ணம். 

ஒரு கி.மீக்குள் ஒரு கொலை

இப்படி வீடு உள்ள இடத்திலிருந்து ஒரு கி.மீ. குள் கொலைகளை செய்வது வசதி. அதிக பேரின் கண்களில் படவேண்டியதில்லை. பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியே வீடு வந்து சேர்ந்துவிடலாம். ரிஸ்க் குறைவு என்பதால் இப்படி கொல்லப்படுபவர்களுக்கான ஆட்களை சீரியல் கொலைகார ர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். 

ஜான் ஜெரார்ட் ஸ்காஃபெர் என்பவர் புளோரிடாவில் காவல்துறை அதிகாரியாக இருந்தார். காலையில் கிளம்பி வேலைக்கு செல்லும்போது பார்க்கும் டீனேஜ் பெண்களை பிடித்து கயிற்றால் கட்டி புதர்களுக்கு அடியில் கட்டிவைத்து விட்டு செல்வார். பிறகு வேலை முடிந்தபிறகு வந்து நிதானமாக ரசித்து வல்லுறவு செய்துவிட்டு கொல்வார். இவரை எப்படி கண்டுபிடிப்பது? காரணம், காலையில் அவர் வேலைக்கு சென்றதற்கான ஆதாரம் இருக்கிறதே?  இப்படி யோசித்து கொலைகளை செய்பவர்கள் அதிகம். 








கருத்துகள்