கொலையாளியின் இடத்தை கண்டுபிடிக்கும் நுட்பம்!
ஒரு கொலையை சீரியல் கொலைகாரர் செய்துள்ளார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
கிரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்..... மூளையைக் கொஞ்சம் யூஸ் பண்ணுங்க என ஹெக்கிமோக்ளு டிவி தொடரில் டாக்டர் அட்டீஸ் அடிக்கடி சொல்லுவார். அதே பஞ்ச்தான்.கொலை செய்யப்பட்டவர், கொலையான விதம், அதில் கிடைக்கும் தகவல்கள் என ஆராய்ந்து பார்த்துத்தான் முடிவுக்கு வரவேண்டும்.
இதனை சரியாக உணராமல் ஒருவர் முடிவெடுத்தால், கொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். போலீசாரும் வலையை வீசிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். குற்றவாளியை பிடிப்பது கடினம்.
கொலைசெய்யப்பட்டவர் கூடுதல் போனஸாக வல்லுறவு செய்யப்பட்டிருந்தால் அதனை சீரியல் கொலைகார ர் செய்துள்ளார் என தீர்மானிக்கலாம். அல்லது கொல்லப்பட்டவரின் உடலில் ஏதாவது குறிப்பிட்ட அடையாளத்தை விட்டுச்செல்லலாம். குறிப்பிட்ட காவல்நிலைய எல்லை தாண்டிக் கூட இதுபோல கொலை சம்பவங்கள் நடந்திருக்கலாம். எனவே, வேறு காவல் நிலையங்களில் நடந்துள்ள கொலை சம்பவங்களின் வரலாற்றையும் ஆராய வேண்டும். இதெல்லாம் சந்தேகத்தில்தான் செய்யவேண்டும். அடுத்த கொலை நடக்கும் வரை காத்திருந்தால் எளிதாக குற்றவாளியை பிடித்து விடலாம்.
கொலையாளியின் வசிப்பிடம்
கொலை செய்யும் சீரியல் கொலையாளி, தனது இடத்தை முக்கியமாக கருதுவார். அவரைப் பொறுத்தவரை வசதியான இடத்தில் வாழ்ந்துகொண்டுதான் அங்குமிங்கும் உலாத்திக் கொண்டு கொலைகளை செய்து வருவார். அவர் வாழுமிடத்திற்கும் கொலை நடந்த இடங்களுக்குமான தொலைவு குறைவாக இருக்கும். ஏன் இப்படி குறிப்பிட்ட இடங்களில் கொலை செய்தார் என ஆராய்ந்தால், அந்த இடங்களை தன்னால் கட்டுப்படுத்த முடியும் என சீரியல் கொலைகார ர் நினைத்திருப்பார் என்பதே பதிலாக வரும். காவல்துறை இதனை கண்டுபிடிப்பதை ஜியோகிராபிகல் புரோபைல் என்று கூறுவார்கள்.
நெடுஞ்சாலை, ஆறுகள், காடு ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வல்லுறவு செய்து உடலை தூக்கி எறிய ஏற்றவை என்பதால், சீரியல் கொலைகார ர்கள் இதுபோன்ற இடங்களை தேர்ந்தெடுப்பார்கள். உடனே பிடிபடாமல் இருக்க வெவ்வேறு நகரங்களில் குற்றங்களை செய்வதும் ஒருவகை. பெரும்பாலும் மிகச்சிலர் மட்டுமே புத்திசாலித்தனமாக யோசிப்பார்கள் என்பதால் கவலைப்படவேண்டியதில்லை.
pat brown
கருத்துகள்
கருத்துரையிடுக