வீட்டை கொலைசெய்த பெண்களின் உடல் உறுப்புகளால் அலங்கரித்த கொலைகாரர்

 








மோசமான கொலைகாரர்

ஜெப்ரி டாமரை இப்படி கூறலாம். இவரைப் பார்க்கும் யாரும் கொலைகளை இந்தளவு கொடூரமாக செய்திருப்பாரா என்று கூறவே முடியாது. ஒருவரைக் கொன்று பிறகு அவர்களோடு உடலுறவு செய்வது இவரது வழக்கம். கூடுதலாக உடல் உறுப்புகளை வெட்டி சாப்பிடுவது, அதனை குறிப்பிட்ட வகையில் ஜி.வெங்கட்ராம் புகைப்படம் போல அழகுபடுத்தி வைப்பது ஆகியவற்றை செய்திருக்கிறார். 

இவருக்கு அடுத்து இன்னொருவரைக் கூறலாம் என்றால் நேராக ஜப்பானுக்கு போக வேண்டும். அங்கு வாழ்ந்த இசெய் சகவா முக்கியமான கொலைகார ர். இவர் பிரெஞ்சு பெண்ணை கொலை செய்து அவரது முழு உடலையும் மெல்ல உணவாக்கி சாப்பிட்டார். பிறகு சாப்பிட்ட அனுபவத்தை நூலாக எழுதி மக்களுக்கு கொடுத்தார். எதற்கு.. யான் பெற்ற இன்பத்தை... அதேதான். இதற்காக அரசு இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்தது. வெளியே வந்தவர் ஏதாவது குற்றங்கள் செய்தாரா என்பது தெரியவில்லை. 

வெறுக்க கூடிய கொலைகாரர்

கார்ல் பன்ஸ்ராம். இவர் நான் கொலை செய்ய நினைப்பவர்களை கொல்வதுதான் திருப்தி தருகிறது. ஒட்டுமொத்த மனித இனத்தையே நான் வெறுக்கிறேன். கொள்ளை, கொலை, அழிப்பது, கொல்வது என்பதை நான் செய்ய நினைக்கிறேன். நான் எத்தனை நாட்கள் வாழ்கிறேனோ அத்தனை நாட்களும் இதனை செய்வேன் என்று பேட்டி தட்டினார். 

ஆயிரக்கணக்கான கொள்ளைகள், வழிப்பறிகள், 21 கொலைகளை செய்தவர் இந்த மகான். 

வினோதமான கொலைகாரர்

எட் கெய்ன் என்பவர் இந்த வகையில் முதலிடம் பெறுகிறார். இவரைப் பொறுத்தவரை பழங்குடிகளின் பழக்கத்தை பின்பற்றுகிற ஆள். பழங்குடி இனத்தில் குறிப்பிட்ட விலங்கை வேட்டையாடினால் அதில் எந்த பாகத்தையும் ச்சே வேண்டாம் என்று தூக்கி எறிய மாட்டார்கள். எட் கெய்னும் அப்படித்தான். இவர் பெண்களை கொன்று தின்பார். பிறகு உடல் உறுப்புகளை எடுத்து இரவும் பகலும் உழைத்து அதனை சமையல் பாத்திரங்களாக மாற்றுவார். அல்லது வீட்டில் அலங்காரப் பொருட்களாக உருவாக்கிக்கொள்வார். அந்த வகையில் மனித உடல் உறுப்புகளை இன்டீரியர் பொருட்களாக மாற்றிய சாதனையாளர் எட்கெய்ன்தான். 








கருத்துகள்