மதம் சார்ந்து மக்களை புறக்கணித்தால் பொருளாதார வளர்ச்சி கிடைக்காது! ப.சிதம்பரம்

 









ப.சிதம்பரம்

எம்.பி. ராஜ்ய சபா

காங்கிரஸ் அரசு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பொருளாதார சீர்திருத்தங்களை அமல் செய்தது. இப்போது அதன் நிலை பற்றி தங்கள் கருத்து என்ன?


கடந்த முப்பது ஆண்டுகளாக பொருளாதார சீர்த்திருத்தங்களால் நிறைய ஏற்ற இறக்கங்கள் நடைபெற்றுள்ளன. முக்கியமான சீர்திருத்தங்கள் வந்துள்ளன. சில மோசமான முடிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2004-2010 காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக ஏற்பட்டுள்ளது. 2018-2021 வரையிலான காலகட்டத்தில் வளர்ச்சி தடைபட்டுள்ளது. நான் சீர்த்திருத்தங்கள் பற்றிய கலவையான எண்ணங்களைக் கொண்டுள்ளேன். அரசு இப்போது பொருளாதார வளர்ச்சி மீது கவனம் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.  இப்போதுள்ள மத்திய அரசு தேர்தலுக்காக மக்களை பிரிப்பது, பிரிவினைவாத த்தை ஆதரிப்பது என செயல்பட்டு வருகிறது. மக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவேண்டாம் என நினைக்கிறார்கள். முழு நாட்டில் உள்ள மக்களுமே வறுமை சூழலில் பயத்துடன் புறக்கணிப்பட்டவர்களாக  வாழ்ந்து வருகிறார்கள். 


கடந்த முப்பது ஆண்டுகளில் வருமானம் அதிகரித்துள்ளது. அதேசமயம் குவிகிற செல்வத்தினால் பாகுபாடும் கூடியுள்ளது. சீர்திருத்தங்களை இன்னும் சரியாக செயல்படுத்தியிருக்க வேண்டுமா?

நாற்பது ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ள பொருளாதாரம் திறக்கப்படும்போது, அதில் உடனே வெல்பவர்களும் தோற்றுப் போனவர்களும் இருப்பார்கள். பொருளாதார இடைவெளியும் ஏற்படும். அவற்றை விரைவில் தீர்க்க வேண்டும். நாம் அப்பணியில் தோற்றுவிட்டோம். நாங்கள் இந்த இடைவெளியே தீர்க்கவே மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம், கல்வி உரிமைச்சட்டம், உணவு பாதுகாப்புச்சட்டம் ஆகியவற்றை உருவாக்கினோம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகள்தான். ஆனால் முழுக்க போதுமானவையல்ல. சுகாதாரத்தை அனைவரும் எட்டும் வகையிலான அமைப்புகள், கல்வி அமைப்பை மாணவர்கள் எளிதில் அணுகும்படியிலான செயல்பாடு, குறைந்தளவிலான ஜிடிபி சதவீதம், திருப்தி தராத நேரடி, மறைமுக வரிகளின் அளவு, குறைந்தளவிலான செல்வ வரி, ஒரே நிறுவனத்தின் ஆதிக்கத்தை ஒழிக்கும் படியான சட்டங்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கவேண்டும். இதன் காரணமாக வளர்ந்த இடைவெளிகளை சமாளிப்பது எளிதானதல்ல. 

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளைக் கொண்ட கூட்டணியில் நீங்கள் நிதிசார்ந்த பணிகளை செய்துள்ளீர்கள். பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தியுள்ளீர்கள். அதற்கும் பாஜகவின் சீர்த்திருத்தங்களுக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா?

காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிகள் இணைந்த கூட்டணியில் கொண்டு வந்த சீர்திருத்தங்களை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட பிறகு நாடாளுமன்றத்தில் மசோதாவாக கொண்டு வந்தோம். பின்னர் அது சட்டமானது. ஆனால் பாஜகவின் அரசில் அப்படி நடக்கவில்லை. அவர்களது கூட்டணியில் பிற கட்சிகள் ஏற்றுக்கொண்டாலும் இல்லையென்றாலும் மசோதா சட்டமாக்கப்படுகிறது. இதுதான் முக்கியமான வேறுபாடு. கொள்கை, மசோதா, சட்டம் போன்றவற்றில் கூட்டணி கட்சிகளையும் உள்ளடக்கியது என்பதை பாஜக புரிந்துகொள்ளவில்லை. 


பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கியமான காரணமாக தங்களுக்கு தேவைப்பட்டவர்களுக்கு உதவுவது(குரோனிசம்) என்பதை முன்னாள் பிரதமர் மன்மோகன் கூறினார். நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

முற்போக்கு கூட்டணியில் குரோனிசம் என்பது ஆபத்தானதாக பார்க்கப்பட்டது. இன்று அதே விஷயம் சாதாரணமானதாக மாற்றப்பட்டுவிட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன். ஸ்புட்னிக் என்ற ரஷ்ய தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பத்து மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவசரகால பயன்பாட்டுக்கு கூட அதனை பயன்படுத்தியிருக்க முடியும். ஆனால் இன்றுவரை இந்தியாவில் இரண்டே ஊசிகள்தான் நடைமுறையில் கிடைக்கின்றன. 

இந்தியா மதச்சார்பற்ற ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. இதற்கும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கும் தொடர்பு உள்ளதா?

நிச்சயமாக உள்ளது. வரலாற்றில் வெளிப்படையான ஜனநாயக அரசில்தான் பொருளாதார வளர்ச்சி எளிதாக நடக்கும் என்பதை கண்டிருக்கிறோம். இப்படி இருக்கும் நாட்டில்தான் வறுமையையும் ஒழிக்க முடியும்.  இந்த பாடம் அதிக மக்கள் தொகையும், பன்மைத்துவ கலாசாரம் கொண்ட இந்தியாவுக்கு மிகவும் பொருந்தும். பெரும்பான்மையான மக்கள் தீண்டாமையால் புறக்கணிக்கப்பட்டால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. இந்த வகையில் பட்டியலின மக்கள், ஆதிதிராவிடர்கள், மொழி சிறுபான்மையினர், மத சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வருவார்கள். மதச்சார்பற்ற அரசு என்பதன் அர்த்தம், பிரிவினைவாதம் அல்லாத பெரும்பான்மை மக்களை மட்டுமே ஆதரிக்கும் தன்மையற்ற, அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கிற அரசு எனலாம்.  இந்தியா இந்த முறையில் செயல்படாதபோது பொருளாதார வளர்ச்சி கிடைக்காது. 



ஃபிரன்ட்லைன்

ராஜலட்சுமி டி.கே

கருத்துகள்