வன்முறையைக் கொண்டாடும் தீவிரவாத இயக்கங்கள்

 








தாலிபன்


ஆப்கானிஸ்தானை ஆளுகின்ற தீவிரவாதக் குழு. மதநம்பிக்கைப்படி ஆட்சி நடத்துபவர்கள். இவர்களுக்கு எதிராக இருந்த பஞ்ஷிர் பகுதியையும் நவீன ஆயுதங்களோடு, ராணுவப் பயிற்சியோடு கையகப்படுத்திவிட்டனர். 

இவர்களை ஊக்குவிப்பது பாகிஸ்தான் நாடு. தாலிபன் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களை பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் சுலபமாக சந்திக்கலாம். 

ஹபிபுல்லா அகுந்த்ஸாடா, மொகமது ஹசன் அகுந்த், அப்துல் கானி பாரதர் ஆகியோர் தாலிபன் அமைப்பின் முக்கியமான தலைவர்கள். 


ஹக்கானி குழு

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற குழு. இப்போது தாலிபனில் முக்கியமான அங்கம். 

தாலிபன், அல்கொய்தா ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களையும் இக்குழு ஒருங்கிணைக்கிறது. 

இதனை தொடங்கியவர் ஜலாலுதீன் ஹக்கானி. அவரின் மகன் சிராஜூதீன் இக்குழுவின் முக்கியமான தலைவர். புதிய தாலிபன் அரசில் இவரும் முக்கியமான அங்கம். அதாவது அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். 

வடக்கு கூட்டணி

தாலிபன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கூட்டணி. பஸ்துன் இஸ்லாமிய கூட்டணி. எப்போதும் தாலிபன்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். பஞ்சிர் பள்ளத்தாக்கிலிருந்து தாலிபன்களை எதிர்க்கிறார்கள். இவர்களை தாக்கி பகுதியை பிடித்துவிட்டதாக தாலிபன்கள் கூறினாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது என கூறியிருக்கின்றனர். 

இவர்களை ஈரான், தஜிகிஸ்தான், இந்தியா ஆகியோர் ஆதரிக்கின்றனர். அஹ்மத் மசூத் , முன்னாள் ஆப்கானிய துணை பிரதமர் அம்ருல்லா சலேஹ் ஆகியோர் அமைப்பின் முக்கியமான தலைவர்கள்.


அல் கொய்தா

தொண்ணூறுகளில் ஆப்கானிஸ்தானுக்கு வந்த தீவிரவாத இயக்கம் இது. இதனை பின்லேடன் வழிநடத்தினார். தாலிபன் அல்கொய்தாவிற்கு ஆதரவு கொடுக்க முக்கியமான காரணம், வடக்கு கூட்டணியை முறியடிக்க வேண்டித்தான். அல்கொய்தாவும் அவர்கள் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் வடக்கு கூட்டணியின் தலைவர் அஹ்மத் ஷா மஸ்தூத்தை கொன்றனர். 

இந்த தீவிரவாத இயக்கத்திற்கு வளைகுடா, ஆப்பிரிக்காவிலிருந்து நிதி கிடைக்கிறது. 


அய்மான் அல் ஜவாகிரி என்பவர்தான் முக்கியமான தலைவர். பத்துபேர் கொண்ட குழுவை இவர்தான் வழிநடத்துகிறார். 


டெரிக் இ தாலிபன் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் செயல்படும் தாலிபன் குழு. பாகிஸ்தானுக்கு எதிராகவும்,. ஆப்கானிய அரசுக்கு எதிராகவும் நின்று தாலிபனுக்கு உதவுகிறது. இதில் சிலர் ஐஎஸ் குழுவில் இடம்பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. 

முக்கியமான தலைவர் என நூர் வாலி மெஹ்சூத் என்பவரை கூறலாம். 

உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய குழு

அல் கொய்தாவை ஆதரித்து செயல்பட்ட சிறிய குழு. வடக்கு பகுதி ஆப்கானிஸ்தானை தாலிபனுக்கு ஆதரவாக ஆள முயன்ற குழு. 

கிழக்கு துர்க்கிஸ்தான் இஸ்லாமிய குழு

சீனாவில் உய்கூர் மக்களுக்கான தனிப்பகுதியை உருவாக்க முயலும் இஸ்லாமிய குழு. ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த வீர ர்கள் இதில் இடம்பெற்றுள்ளார். இப்போது இந்த இயக்கம் சிரியாவில் இயங்கி வருகிறது. 

toi







கருத்துகள்