பிணங்களை விதைப்போம்!

 





உடலை மறைக்க சாமர்த்தியம் தேவை


கொன்ற உடலை தூக்கிச்சென்று மலைகள் உள்ள இடம், மரங்கள் அடர்ந்த இடம்  என்று போடுவது ஒருவர் தனது அடையாளத்தை எந்தளவு மறைக்கிறார் என்பதைப் பொறுத்ததே ஆகும். பெரும்பாலும் கொலை செய்துவிட்டு உடலை அதே இடத்தில் போட்டுவிட்டு வருவதே எளிதானது. அதை தூக்கிக்கொண்டு அலையும்போது, போக்குவரத்து விதிமீறல்களை செய்து மாட்டிக்கொண்டு சிறைக்கு போன சீரியல் கொலைகாரர்கள் அதிகம்.

மண்டையிலேயே தாக்கி பெண்ணைத் தூக்கி தொலைதூரம் செல்பவர்கள், வழியில் நல்ல இடமாக பார்த்து வல்லுறவு செய்துவிட்டு கொன்று புதைத்துவிடுவார்கள். இத்தகைய வழக்கை காவல்துறை கையாள்வது கடினம். உடலை துண்டுகளாக்கி வீசுவதையும் இதில் சேர்க்கலாம். 

வாழும் சுற்றுப்புறத்திலேயே புதைப்பது, தூக்கி எறிவது ஆபத்தானது. யாரேனும் ஒருவர் எளிதாக பார்த்துவிட வாய்ப்புள்ளது. கைவிடப்பட்ட வீடு, மறைவாக இருளாக உள்ள பார்க்கிங் பகுதி ஆகியவை இதற்கு உதவலாம். நெடுஞ்சாலையில் உடலை தூக்கி போடுவதற்கு முன்னர் சாலையை கவனிக்கவேண்டும். வாகனங்களில் செல்பவர்கள் கவனித்து விட்டால், சோலி முடிந்துவிடும். 

பிணங்களை விதைப்போம்

ஒரே இடத்தில் நிறைய பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட உடன் ஊடகங்களில் எப்படி செய்திகளை வெளியிடுவார்கள்? சீரியல் கொலைகாரனின் அட்டகாசம் பாரீர். ஒரே இடத்தில் எட்டு பிணங்கள் என ஃபிளாஷ் செய்திகளை வெளியிடுவார்கள். உண்மையில் சீரியல் கொலைகாரர்கள் வெவ்வேறு இடங்களில் குறிப்பிட்ட காவல்துறை, பிற காவல்துறையின் ஆளுகை  உள்ள இடங்களில் வழக்குகளை பதிவு செய்யுமாறு செய்வார்கள். அப்போதான் வழக்கு அந்தரத்தில் நிற்கும். கொலைகளை பலரும் இணைத்துப் பார்க்க முடியாமல் தடுமாறுவார்கள். 

குப்பைத்தொட்டி இல்லாத இடங்களிலும் கூட குப்பைத்தொட்டி இருப்பதாக நினைத்து குப்பைகளை கொட்டுகிறோம். அதேபோல, பிணங்களை ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் ஒரே இடத்தில் புதைத்துவிடுகின்றனர். பிறகு ஏதாவது வேலைக்காக அதை தோண்டும்போது மாட்டிக்கொள்கின்றனர். 




 




கருத்துகள்