சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்!

 






சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்!

உடனே எங்கே என்றுதானே அனைவரும் கேட்பார்கள். தமிழ்நாட்டில் அல்ல. பீகார் மாநிலத்திலுள்ள மதுபானி மாவட்டத்தில் இப்படி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சுகேத் எனும் கிராமத்தில்  கிராம மக்களுக்கு இலவசமாக கிடைத்த கேஸ் சிலிண்டர்களை தொழுவத்திலுள்ள சாணி, குப்பைகளைக் கொடுத்து இலவசமாக எரிவாயும் நிரப்பிக்கொள்ளலாம். இதனை உருவாக்கியவர்கள் இருவர். இருவருமே சமஸ்பூர் மாவட்டத்தில் மத்திய விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒருவரின் பெயர் ராஜேந்திர பிரசாத், மற்றொருவர் ரமேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா. 

மத்திய அரசு கிராம மக்களுக்கென இலவசமாக கேஸ் சிலிண்டர்களை உஜ்வாலா திட்டத்தின்படி வழங்கி வருகிறது. இதை நான் ஆச்சரியமாக கவனித்தேன். அப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதனை எரிவாயு நிரப்ப போதுமான பணம் கிராமத்து ஏழை மக்களிடம் இல்லை என்பதை அறிந்தேன். அதற்காகத்தான் பசுக்களின் சாணியைக் கொடுத்து எரிவாயுவை நிரப்பும் மாடலை உருவாக்கினோம் என்றார் ஸ்ரீவஸ்தவா. பீகாரின் முசாபர் நகர், ஜார்க்கண்டின்  டியோகர் நகரிலுள்ள கோவில்களுக்கு கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், இலைகள் ஆகியவற்றையும் ஸ்ரீவஸ்தவா பெற்று அதனை உரமாக்கிய சாதனை செய்துள்ளார். 

இரண்டு மாதங்களுக்கு 1200 கி.கி சாணியை கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் தந்தால் அவர்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டரை எரிவாயுவால் நிரப்பித் தருகிறோம். இதற்காக தினசரி கிராமத்திலுள்ள வீடுகளில் 20 கிலோ சாணியை ஊழியர்கள் சேகரித்து வருகின்றனர்.  முதல் கட்டமாக இந்த மாடலை நூறு வீடுகளுக்கு நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதில் உள்ள முக்கியமான பிரச்னை, யாதவ இனத்தினர் மட்டுமே கால்நடைகளை வளர்க்கின்றனர். அதாவது கிராமத்தில் உள்ள பாதிப்பேர் மட்டுமே சுகேத் திட்டம் மூலம் பயன்பெறமுடியும். 

இத்திட்டத்தை ஏழு பகுதிகளுக்கு விரிவுபடுத்த ஸ்ரீவஸ்தவா குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படி பெறப்படும் சாணியை கிராமத்தைச் சேர்ந்த சுனில் யாதவ் என்பவர் வழங்கிய நிலத்தில் குப்பையாக்குகின்றனர். இதனை உரம் தேவைப்படுவோருக்கு விற்கின்றனர். இது சந்தையில் விற்கும் உரத்தை விட குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பது முக்கியமானது. மனதின் குரல் நிகழ்ச்சியில் சுகேத் திட்டத்தை பிரதமர் மோடி பாராட்டிப் பேசியுள்ளார். 

இந்து ஆங்கிலம்

அமர்நாத் திவாரி




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்