கொலைகாரர்களிடம் குற்றவுணர்ச்சி இருக்குமா?

 






கொலைக்கு முன்னும் பின்னும்

கொலை செய்தபிறகு சீரியல் கொலைகார ர்கள் அதை நினைத்து வருந்துவார்கள். அவர்களின் உடல் எடை குறையும். ஜேக் டேனியலை சரண்டைவார்கள் என மென்மையான விக்ரமன் பட பார்வையாளர்கள் நினைப்பார்கள். உண்மை அப்படியல்ல. கஃபே ஃபிரெஷ்ஷில் ஃபிரெஞ்சு ஃபிரை ஆர்டர் செய்து கோக்கை சுவைத்தபடி சாப்பிடுவார்கள். 

கொலைக்கு முன்னிருந்த ஆவேசமும் இப்போது இருக்காது. அமைதியாக காணப்படுவார்கள். மற்றபடி ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போய் எம்எக்ஸ் பிளேயரில் வெப் சீரிஸ் பார்ப்பது, குழந்தைகளோடு விளையாடுவது என்பது போலத்தான் சீரியல் கொலைகாரர்களின் வாழ்க்கை இருக்கும். பெரிதாக கொலையை நினைத்து வருத்தமெல்லாம் படமாட்டார்கள். முதல் இரண்டு கொலைகளுக்கு சற்று பதற்றமான சூழலில் அவர்களின் உடல்மொழி இருக்கும். பிறகு இயல்பான நிலைக்கு மாறிவிடுவார்கள். 

ஆதாரங்களை அழிக்கும் முயற்சி


குற்றங்களை பிறர் பார்க்கும் வரை செய்யவேயில்லை என்று சாதிப்பவர்கள்தான் இங்கு அதிகம். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலைகளை செய்தாலும் கூட அவர்கள் தங்களை அங்கிருந்து தப்பிக்க வைக்கும் விஷயங்களை செய்வார்கள்.  கைரேகைகளை அழிப்பார்கள், தங்களது பொருட்களை பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு ரத்தக்கறைகளை வாஷ்பேசினில் கழுவிக்கொண்டு காரில் பறப்பார்கள். கொலையின்போது அணிந்த உடையை தீ வைத்து எரிப்பார்கள். காரை தண்ணீர் விட்டு தேய்த்து கழுவுவார்கள். 

காவல்துறை நாய் கூட தங்கள் மீது சந்தேகப்படக்கூடாது என்பதுதான் இவர்களது நோக்கம். 

ரகசியம் சொல்லாதே

போரில் பங்கேற்றவர்கள் வேண்டுமானால் காக்டெயில் பார்டிக்காக காத்திருந்து, தங்கள் பெருமைகளை வெளியே சொல்லலாம். ஆனால் சீரியல் கொலைகார ர்கள் அப்படி சொல்ல தொடங்கினால் விரைவில் மாட்டிக்கொள்வார்கள். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களிடம் கருத்துகளை பகிர்ந்துகொள்வார்கள். சமூகரீதியாக பெரியளவு நல்ல பழக்க வழக்கம் இவர்களுக்கு இருக்காது. எனவே பார்ட்டிகளில் இவர்களை பார்ப்பதும் பேச வைப்பதும் கடினமானது. 

கொலைகளை நினைத்து பார்ப்பது இன்னும் அதனை எப்படி சிறப்பாக செய்யலாம் என்பதற்காகத்தான். அதில் குற்றவுணர்ச்சி கொள்ளவெல்லாம் ஏதுமில்லை. கொலைகளை அடிக்கடி மனதில் நினைத்துப் பார்த்து இன்னும் நேர்த்தியை கூட்டுவது அவர்களின் வழக்கம். 






 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்