பருத்தி விவசாயின் தற்கொலை வழியாக விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டப் பார்வை! - நூல் அறிமுகம்

 








நூல்கள் அறிமுகம்


ராம்ராவ்

ஜெய்தீப் ஹர்டிகர்

ஹார்பர் கோலின்ஸ்

2014ஆம் ஆண்டு ராம்ராவ் பான்செல்னிவர் என்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பூச்சிக்கொல்லியை குடித்து இறந்துபோன இவர்தான், விவசாயிகளின் தற்கொலையை தொடங்கி வைத்த பெருமையைக் கொண்டவர். அன்றிலிருந்து இன்றுவரை 30 நிமிடங்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  கடந்த இருபது ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். 


எழுத்தாளர் ஜெய்தீப், ராம்ராவ் வாழ்க்கை வழியாக விவசாயிகளின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறார். 





ஆர்ட் சினிமா அண்ட் இந்தியாஸ் பார்காட்டன் ஃபியூச்சர்

ரோச்சனா மஜூம்தார்

கொலம்பியா யுனிவர்சிட்டி பிரஸ்

இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு சினிமா உலகம் எப்படி வளர்ந்தது, கலைப்படங்களுக்கான இடம், வணிக படங்களின் சந்தை, சத்ய ஜித்ரே, மிருணாள் சென், ரித்விக் கடக் ஆகிய இயக்குநர்களின் பங்களிப்பு பற்றி நூல் பேசுகிறது. 





தி மிட் வே பேட்டில் 

கௌதம் சிந்தாமணி

ப்ளூம்ஸ்பரி

2019ஆம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமரானார்.  முதல் முறை ஆட்சியில் தயங்கியவற்றை இந்த முறை பெரும்பான்மை உதவியுடன் உறுதியாக செய்தார். விவசாயிகள் சட்டம், குடியுரிமைச்சட்டம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து, விவாதிக்காமலேயே பல்வேறு சட்டங்களை நிறைவேற்றுவது என புல்லட் ரயில் வேகத்தில் ஆட்சி நடக்கிறது. உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் தில்லுமுல்லுகளை ஆசிரியர் பேசியிருக்கிறார். 

எ பேஸேஜ் நார்த்

அனுக் அருட்பிரகாசம்


இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரை ப் பற்றி பேசும் நூல் இது. இந்த நூல் புக்கர் பரிசுக்கான தேர்வில் இருந்தது இதன் இலக்கிய மதிப்பைப் பேசுகிறது. 




கருத்துகள்