சிஎஸ்ஆர் நிதியில் முன்னிலை- தமிழ்நாடு சாதனை
படம் - விகடன் |
சிஎஸ்ஆர் நிதியை பெருநிறுவனங்கள் கட்டாயம் அரசுக்கு வழங்க வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதிலிருந்து இதுவரை 92., 605 கோடி ரூபாய் அரசுக்கு கிடைத்துள்ளது. நாட்டிலேயே நான்காவது மாநிலமாக தமிழ்நாட்டிற்கு 4,094 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள சிஎஸ்ஆர் நிதியை நிதியமைச்சர் பிடிஆர் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் மாவட்ட அளவு, குறிப்பிட்ட தொழில்துறை சார்ந்து கிடைத்துள்ள நிதி அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.
2018-19, 2019-29 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் காரியாலயங்களைக் கொண்டுள்ள பெரு நிறுவனங்கள் அரசுக்கு 800 கோடி ரூபாய்
கிடைத்துள்ளது. சிஎஸ்ஆர் நிதி என்ற வகையில் 72 சதவீதம் கிடைத்துள்ளதாக மாநில அரசு தகவல் கூறியுள்ளது. ஐ.நாவின் தகவல் அடிப்படையில் தமிழ்நாடு இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உள்ளது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் உள்ள தமிழ்நாடு , மக்கள்தொகை அடிப்படையில் ஆறாவது இடத்தில் உள்ளது.
2020- 21ஆம் ஆண்டில் நிதிஆயோக்கின் அடிப்படையில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, உடல்நலம் ஆகியவற்றில் பிற மாநிலங்களை விட முன்னேறி இரண்டாவது இடத்தில் உள்ளதை அறிக்கை தெரிவித்துள்ளது. சென்னை நகரம் சிஎஸ்ஆர் நிதியில் 25 சதவீத த்தை தந்துள்ளது. அடுத்து கோவை, வேலூர் ஆகிய நகரங்கள் முறையே 6, 5 என உள்ளன.
டெக்கன் கிரானிக்கல்
கருத்துகள்
கருத்துரையிடுக