திருமண வல்லுறவு பற்றி விவாதித்துத்தான் தீர்வு காண முடியும்! - டாக்டர் உபேந்திர பக்ஷி







நேர்காணல்

உபேந்திர பக்ஷி

வார்விக் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர்


மதுரா வல்லுறவு வழக்கு ஒன்றில் வல்லுறவு தொடர்பான சட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு  பகிரங்க கடிதம் எழுதியவர்களில் உபேந்திராவும் ஒருவர். 



அண்மையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமண உறவில் கணவர் வற்புறுத்தி உறவு கொண்டால், அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. வல்லுறவு கிடையாது என கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அந்த நீதிபதி அப்படி கூறியுள்ளதற்கு சட்டம் முக்கியமான காரணம். ஏனென்றால் கணவர் மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தினால் அதனை குற்றமாக பார்க்க சட்டப்பிரிவுகள், ஏன் சட்டமே கிடையாது. அவர் அப்படி கூறியதில் தவறு ஏதும் கிடையாது. இதற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டியதில்லை. மக்களின் குடியுரிமை பற்றியது. திருமணமான பிறகு நடக்கும் வன்முறை, வல்லுறவு பற்றி நம்மிடையே சட்டம் இல்லாத து நீதிபதியின்  குற்றம் அல்ல. 

நீதிமன்றங்கள் இதில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளது ஏன்?

உச்சநீதிமன்ற சட்டப்படி பதினெட்டு வயதிற்கு கீழுள்ள பெண்களோடு உறவு கொள்வது, வல்லுறவு என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. வழக்குரைஞர் செய்ய முடியாததை நீதிமன்றம் சட்டமாக்கி  நடைமுறைப்படுத்த முடியும். தன்பாலின ஈர்ப்பு என்பது குற்றமில்லை என்று நீதிமன்றங்கள் அறிவித்துள்ளன. 2000ஆவது ஆண்டில், சட்ட கமிஷன் பிபி ஜீவன் ரெட்டி , மண வாழ்க்கையில் வல்லுறவு என்பதற்கான சட்டம் என்பது காலத்தைப் பொறுத்ததல்ல என்று கூறினார். 2013இல் சட்ட கமிஷனில் திருமண உறவில் விருப்பமின்றி உறவு கொள்வது வல்லுறவு என சட்டமாக்கலாம் என்று கூறப்பட்டது. எனவே சட்டம் என்பது நீதிபதிகள் கொண்டுள்ள கருத்துப்படி மாறுபடலாம். ஊடகங்கள் இதனை பல்வேறு கோணங்களில் அணுகி செய்திகளை வெளியிடுகின்றன. 

வரதட்சணை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் என்பது பெண்களால் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறதே?

இப்படி தவறாக பயன்படுத்தப்படுவது இயற்கைதான். ஏனென்றால், பல்லாண்டுகளுக்கு பிறகு பெண்கள் இப்போதுதான் அதிகாரம் பெற்றுள்ளனர். மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரம் சார்ந்த பல்வேறு சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காவல்துறை தனது அதிகாரங்களை பயன்படுத்தி 2 ஆயிரம் பக்கங்களுக்கு வழக்குப் பதிவுசெய்து நேரத்தை வீணாக்கியுள்ளனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முயல வேண்டும். சட்டங்களை எந்தளவு தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்கவேண்டும். வன்முறை சட்டம் 498 ஏ சட்டத்தை நீதிமன்றங்கள், வழக்குதார ர்கள் தவறாக பயன்படுத்தினர் என்று கூறின. 

1979ஆம் ஆண்டு நீங்களும் பிற போராட்டக்கார ர்களும் பகிரங்கமான கடிதம் ஒன்றை எழுதி, வல்லுறவு சட்டம் ஒன்றை உருவாக்க கோரினீர்கள். இது எப்படி செயல்படுகிறது?

நாங்கள் எழுதிய கடிதம், வல்லுறவு சட்டம் பற்றிய விவாதத்தை உருவாக்கியது. திருமண உறவில் வல்லுறவு என்பது  இன்னும் ஆழமானது. நீங்கள் இதுபற்றி உங்கள் கருத்தை சொல்லவேண்டும். நான் என்னுடைய கருத்தை சொல்லுவேன். இதற்குப் பிறகு வேறு நபர்கள் தங்களுடைய கருத்தை சொல்லுவார்கள். நாம் இதற்கான வழியைக் கண்டுபிடிக்கவேண்டும். அப்போதுதான் சரியான தீர்வைப் பெற முடியும். 


டைம்ஸ் ஆப் இந்தியா

ஹிமான்ஷி தவான்



கருத்துகள்