இடுகைகள்

காட்டுயிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீட்டுப்பூனைகளால் காட்டுயிர்கள் அழிந்து வரும் அவலம்!- மேற்கு நாடுகளில் மக்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் வலுக்கும் மோதல்!

படம்
              காட்டு விலங்குகளை அழிக்கும் வீட்டுப்பூனைகள் ! நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தில் பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஆரி ட்ரோபோர்ஸ்ட் . இவர் , அண்மையில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் காட்டில் உள்ள சிறுவிலங்குகளை வேட்டையாடுவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் . இதுவரை ஓநாய்களின் அழிவு , விலங்குகளை வேட்டையாடுவதற்கு அரசு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையாண்டவர் ட்ரோபோர்ஸ்ட் . ஆனால் அதைவிட பூனைகளைப் பற்றி இவர் எழுதிய ஆய்வறிக்கைக்கு கொலைமிரட்டல்களை சந்தித்து வருகிறார் . ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , அமெரிக்கா , நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பூனைகளை வளர்ப்பவர்களும் , சூழலியலாளர்களு்ம இதுதொடர்பாக தீவிரமாக மோதி வருகின்றனர் . ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் வேட்டையாடுவதை அனுமதிக்கும் சட்டத்தை மாற்றவேண்டி சூழலியாளர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் . அமெரிக்காவில் மட்டும் வீட்டுப்பூனைகளால் 630 கோடி சிறு காட்டு விலங்குகளும் , 130 கோடி பறவைகள் பலியாகியுள்ளன என்பதை ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது . நெதர்லாந்தில் செய்த ஆய்வில் இதைப்போல இரு

காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதவை`!

படம்
          காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது படம் எடுக்கும் விலங்கிடமிருந்து பாதுகாப்பான தொலைவில் தள்ளியிருக்கவேண்டும் . அமைதியாக இருக்கவேண்டும் . காட்டுக்கான விதிகளை கடைபிடியுங்கள் . நேர்மையான முறையில் படம்பிடியுங்கள் . படம்பிடிக்கும் விலங்கு பற்றி முதலில் ஆராய்ச்சி செய்து படியுங்கள் . பின்னர் அதனை அதுதொடர்பான ஆராய்ச்சியாளர்களிடம் பேசி அதன் பழக்கவழக்கங்களை கவனியுங்கள் . பத்திரிகையாளர் போல நிஜத்தை மட்டுமே புகைப்படமாக பதிவு செய்யவேண்டும் . உங்கள் வருகை விலங்கை எரிச்சல் ஊட்டினால் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான தொலைவுக்கு சென்றுவிடுங்கள் . புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்வதற்கு அவசரப்படாதீர்கள் . புகைப்படங்களை முழுமையான தகவல்களுடன் சேகரித்து பிறருக்கு பகிருங்கள் . செய்யக்கூடாதவை . விலங்குகளுக்கு ஆபத்தான உணவுகளை வழங்க கூடாது . உணவிட்டு அதன் தன்மையை மாற்றி படம் பிடிப்பது தவறானது . விலங்குகளிடம் நெருங்க கூடாது . கூட்டமாக உள்ள விலங்குகளின் அருகில் செல்லக்கூடாது . விலங்குகளை காயப்படுத்தக்கூடாது