இடுகைகள்

அல்லு அர்ஜூன். வக்கந்தம் வம்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கட்டுக்கடங்காத கோபம்! - நா பேரு சூர்யா

படம்
பின்டிரெஸ்ட் நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா இயக்கம்: வக்கந்தம் வம்சி ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி இசை: விஷால் சேகர் சண்டைப்பயிற்சி: பீட்டர்ஹெய்ன், ராம் லக்ஷ்மண், கெச்சா கெம்பக்டி, ரவி வர்மா எல்லையில் பணிபுரிய விரும்பும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத வாலிபரின் காதல், கோபம், தேசப்பற்று என அத்தனை எமோஷன்களையும் ப்ரீத்தி ஜாரில் போட்டு மைய அரைத்தால் படத்தின் கதை ரெடி. ஏபிஹெரால்டு படத்தை எக்சர்சைஸ் செய்த உடம்பு மூலம் தாங்குவது அல்லு அர்ஜூன்தான். படம் முழுக்க கோபத்தை அடக்க முடியாமல் தவிப்பதும் ஆக்சனில்  வெடிப்பதுமாக முற்றிலும் வேறு லெவல் அல்லு அர்ஜூன். ஆக்சன் காட்சிகள் அமர்க்களமாக இருக்கின்றன. ஆனால் ஊரில் நடக்கும் ஆக்சன்களுக்கு ராணுவப்பயிற்சிகளை ஒப்பிட்டுக்காட்டுவது எரிச்சலாக இருக்கிறது. அது சண்டையை ரசிப்பதையே தடுக்கிறது டைரக்டர் சார். கோபத்தை அடக்கமுடியாத நாயகனால் வரும் பிரச்னையை சமாளிக்க முடியாத மேலதிகாரி, அவரை உளவியல் மருத்துவரிடம் கையெழுத்து பெற்றுவந்தால் ராணுவத்தில் சேர்ப்பேன் என்று கூறிவிட, அர்ஜூன் சரி என்கிறார். கையெழுத்து வாங்க சென்றபின்தான் தெரிகிறது, அது அவ