இடுகைகள்

கிருமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி, மூளை - அறிவியல் அறிவோம்

படம்
  திருப்பி அடிப்பேன் முதுகில் குத்திய துரோகிகளை நண்பர்களைப் பற்றியல்ல நாம் பேசவிருப்பது. உடலுக்குள் நிறைய கிருமிகள் புகுகின்றன. அவற்றை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பே எதிர்கொண்டு தாக்குகிறது. அதில் முக்கியமானது, வெள்ளை அணுக்கள். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகள் உண்டோ, அதேபோல்தான் கிருமிகளை அழிக்கவும் சண்டையிடவும் நிறைய வேறுபட்ட வெள்ளை அணுக்கள் உண்டு. எடுத்துக்காட்டு. காசநோய் கிருமிகளோடு மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் போரிடுகின்றன.  கிருமிகள் உடலுக்குள் புகுவதை தடுக்க கண்களில் கண்ணீர், மூக்கில் சளி, வாயில் எச்சில், காதில் மெழுகு போன்ற திரவம், வயிற்றில் அமிலம் உருவாகிறது. இவற்றையும் மீறி கிருமி உடலுக்குள் வந்துவிட்டால், நீங்கள் மருத்துவரை சந்தித்து, அவர் கமிஷன் வாங்கும் இடத்தில் ஸ்கேன் எடுத்து, அவரது சொந்த மருந்தகத்தில் உள்ள விற்காத மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வரலாம். காற்றில் உள்ள தூசி, பூவில் உள்ள மகரந்தம் ஒருவரின் உடலுக்குள் செல்லும்போது, அதை நோய் எதிர்ப்பு சக்தி எதிரியாக கிருமியாக நினைக்கிறது. அப்போது அதை எதிர்த்து தாக்குத...

ஆண்டவன் அளிப்பதல்ல; நாம் வாழும் மோசமான சூழலால் உருவாவதே நோய்!

படம்
  கிருமிகளின் ஆக்கிரமிப்பு உடலுக்குள் எப்போதும் நுண்ணுயிரிகள் உண்டு. இவற்றில் முக்கியமானது வைரஸ், பாக்டீரியா. இதில் வைரஸ் ஆபத்தானது. பாக்டீரியாவும் நோய்களை ஏற்படுத்துகிறது. ஆனால், வைரஸ் அளவுக்கு அல்ல.  உடல் நுண்ணுயிரிகளை எப்போதும் வெளியேற்றவே முனைகிறது. ஆனால், வைரஸ், பாக்டீரியா எப்படியேனும் உள்ளே வந்துவிடுகிறது.  உடலுக்கு நோய்க்கிருமி பற்றி பழக்கி, நோயைத் தடுக்க தடுப்பூசிகள் பயன்படுகின்றன. தடுப்பூசிகள் பல்லாண்டு காலம் பயன்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள், மருந்தின் செயல்பாடு ஆகியவை குறித்து வைக்கப்பட்டு பக்க விளைவுகளைக் கட்டுப்படுத்த கற்கிறார்கள். ஆனால் அவசரச் சூழலில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், அதைப் பயன்படுத்துபவர்களுககும் ஆபத்தாக மாறுகிறது.  சில போலி அறிவியல்வாதிகள் அரசியல் ஆதாயங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள தேவையில்லை என்பார்கள். தடுப்பூசியின் தொடக்க காலத்தில் பக்கவிளைவுகளை பெரிதுபடுத்தி பேசுவார்கள். இப்போது கூட தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு அரசு செலுத்திய தடுப்பூசி காரணமாக பலருக்கும் நீரிழிவுநோய் வந்துவிட்டது என வதந்தி பரவி வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. நீங்கள...

தெரிஞ்சுக்கோ - மலம்

படம்
  பீயுக்கும் ஈயுக்கும் என்னலே ஃபிரெண்ட்ஷிப்பு?   என ஓரம்போ படத்தில்   ஜான்விஜய் கேட்பார். காரண காரிய சமகால நட்பை, அந்தளவு கேவலமாக   கொச்சையாக ஆனால் மனதிற்கு உண்மையாக யாரும் சுட்டிக்காட்டி சொல்ல முடியாது. அதை விடுங்கள். மலம் என்றாலும் அதிலும் விஷயம் இருக்கிறது. உடலில் இருந்து வெளியேறும் மலத்தில் பல்வேறு கிருமிகள், தேவையில்லாத வேதிப்பொருட்கள் இருக்கும். அவை வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பசு ஒருநாளில் சுரக்கும் எச்சிலின் அளவு 98- 190 லிட்டர். மனிதர்கள் தம் ஆயுளில் வெளியிடும் அபான வாயுவின் அளவை வைத்து இரண்டாயிரம் பலூன்களை நிரப்பி வானில் பறக்க விடலாம். பலூன் வெடித்தால் என்னாகும் என்ற கேள்வியை த.வி.வெங்கடேஷ்வரனிடம் கேட்டுக்கொள்ளுங்கள். அபானவாயு, ஏப்பம், மலம் ஆகியவற்றை பண்ணை விலங்குகளான பசு, பன்றி, ஆடு மற்றும பிற விலங்குகள் வெளியிடுகின்றன. இதனால் உலகளவில் அதிகரிக்கும் பசுமை இல்ல வாயுவின் அளவு, 14.5 சதவீதம் ஆகும். ஜெயன்ட் பாண்டா, ஒருநாளுக்கு நாற்பது முறை மலம் கழிக்கிறது. யானை தினசரி பதினைந்து முறை சாணத்தை வெளியேற்றுகிறது. இந்த வகையில் நூறு கிலோ சாணம்...

நோய்த்தொற்று கிருமிகளை எளிதாக அழிக்கும் தொழில்நுட்பம்!

படம்
வைரஸைக் கொல்லும் புதிய தொழில்நுட்பம்!  அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த தனியார் தியேட்டர் நிறுவனம், விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வரும் இந்தி சினிமா நடிகர் சல்மான்கான் ”தியேட்டர்களுக்கு செல்வது பாதுகாப்பானதா?” என்று கேட்பார். இதற்கு தியேட்டர் நிறுவனம் ”வைரஸ் நியூட்ரலைசர்  ஒன்றை நிறுவியுள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காற்றில் உள்ள வைரஸ்களைக் கூட இக்கருவி கொல்லும்” என நம்பிக்கையுடன் கூற விளம்பரம் நிறைவடைகிறது.  தியேட்டர்களில் நிறுவப்பட்டுள்ள புதிய வைரஸ் நியூட்ரலைசர் கருவியை கேரளத்தைச் சேர்ந்த ஆல்அபவுட் இன்னோவேஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. கருவியின் செயல்பாட்டைப் பார்த்த 22 நாடுகளிலும் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்தியன் ஏர்ஃபோர்ஸ், ஐக்கிய அரபு அமீரக மாளிகை, டிபி வேர்ல்டு, யுஎஃப்ஓ மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் ஆல் அபவுட் இன்னோவேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன.   தற்போது கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, 10 ஆயிரம் வைரஸ் பாதுகாப்பு கருவிகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இக்கருவிக்கு, வோல்ஃப் ஏர் மாஸ்க் என...

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறை...

நுரையீரலும் எலும்பும் உடலுக்கு செய்யும் பணிகள் என்ன?

படம்
            மூச்சு அமைப்புகள் காற்றிலுள்ள வாயுக்களை சுத்திகரித்து ரத்தத்தில் தூய ஆக்சிஜனை சேர்க்க உதவுகிறது . இந்த அமைப்பு இல்லாதபோது , ஒருவர் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு் போராடும் நிலை ஏற்படும் . பிறந்த குழந்தை பத்தாவது நொடியில் பூமியில் முதல் மூச்சை இழுக்கத் தொடங்குகிறது . கருப்பையில் இருந்த திரவங்கள் மெல்ல வெளியேற்றப்பட காற்று நுரையீரலில் நிரம்புகிறது . இனிமேல் அந்த குழந்தை வளர்ந்து முதியவராக இறக்கும் வரை நுரையீரல் ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்த்தும் , கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றியும் வேலை செய்யும் . இந்த வேலை எப்போதும் நிற்காது . ஒரு நிமிடத்திற்கு இருபது முறை என எண்ணற்ற முறை நுரையீரல் துடிக்கிறது . ஆறு நிமிடங்கள் உடலுக்கு ஆக்சிஜன் போகவில்லையென்றால் உடனே செல்களில் உள்ள நச்சு உடலில் பரவுகிறது . மூளை மற்றும் இதயம் மெல்ல செயலிழக்கத் தொடங்குகிறது . உடலில் நடைபெறும் மூச்சு தொடர்பான பணிகள் அனைத்துமே மூளையால் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுகிறது . அதேசமயம் , மூச்சை செய்யும் வேலைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள முடியும் . ந...

பதற்றமான சூழலில் ஒருவருக்கு ஏற்படும் பழக்கங்கள்!- நகம் கடிப்பது, சிகரெட் பிடிப்பது, விரல் சூப்புவது, அளவுக்கதிகமாக சாப்பிடுவது்

படம்
          ஒருவர் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும்போது கவனித்திருக்கிறீர்களா ? நகங்களை கடிப்பது , பேனாவைத் தட்டுவது , தலைமுடியை சுருட்டுவது , விசில் அடிப்பது , குதிகாலை அசைப்பது என பல்வேறு உடல்மொழிகளை வெளிப்படுத்துவார்கள் . இதனை நாளடைவில் ஒரே மேனரிசமாக மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள் . இப்படி பழக்கங்களை கற்றுக்கொள்வது ஒருவருக்கு ரிலாக்சாக அமையும் . அல்லது அதிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவர் பெறுவார் . அப்படியில்லாதபோது , அப்பழக்கத்தை ஒருவர் செய்யவேண்டியதில்லை . நகம் கடிப்பது பொதுவாக ஒருவருக்கு மனப்பதற்றம் ஏற்படும்போது இப்பழக்கம் ஏற்படுகிறது . உலகில் 44 சதவீத இளைஞர்களுக்கு இப்பழக்கம் உள்ளது . இவர்களின் பொதுவான வயது 19 முதல் 29 வயது வரையில் உள்ளது . குழந்தையாக இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறுபவர்கள் இப்பழக்கத்தை கற்கிறார்கள் . அதுவும் கூட பிறரைப் பார்த்துதான் . விரல் சூப்புதல் இதுவும் கூட பாலருந்தும் குழந்தை , அந்த நினைவிலேயே தன்னை இருத்திக்கொள்வதற்கான நிலைதான் . இந்த பழக்கம் தொடரும்போது குழந்தையின் முன்பற்கள் வெளியே துருத்திக்க...

கொரோனாவுக்கு சானிடைசர் பாதுகாப்பு தருமா?

படம்
டாக்டர் எக்ஸ் இன்று கைகளைக் கழுவுங்கள், அதுவும் சோப்பு போட்டுக் கழுவுங்கள் என்று அரசு முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அக்கறையாக உள்ளன. உண்மையில் கைகழுவினால் வைரஸ் நம் கையை விட்டுவிடுமா என்பது சந்தேகமே. ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை ஹோல்சேல் ரேட்டில் அனைவரும் வாங்கி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் சானிடைசர்களை அழுத்தும் இஸ்க் இஸ்க் ஒலிதான் கேட்கிறது. எங்கள் அலுவலக வளாகத்திலுள்ள மருந்தகங்களில் மாஸ்க் சேல்ஸ் விண்ணுக்கு பறக்கிறது. அப்படியும் விற்பனைக்கு மாஸ்குகள் சரிவர கிடைப்பதில்லை. இதுபற்றி சில கேள்விகள் நமக்கு வந்திருக்கும். அதற்கான பதில்கள் இதோ... சானிடைசரில் எதற்கு ஆல்கஹால் வாசம் வீசுகிறது? இதை கடும் நெடி என்று கூட சொல்லலாம். ஆல்கஹால் நுண்ணுயிரிகளின் உடலிலுள்ள புரத பாதுகாப்பை உடைக்கிறது. இதன்விளைவாக அதன் செயல்பாடு குன்றுகிறது. இதனால்தான் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் எதிரான பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இப்படி புரத அடுக்கை உடைப்பதை டிநேச்சுரேஷன் என்கிறார்கள். சில நுண்ணுயிரிகள் வெப்பம் அதிகரித்தால் செயல்திறன் குன்றி இறக்கும். முட்டைகளை வேக வைத்து சாப்பிடச்ச...

99.9 சதவீதம் கிருமிகளை அழிக்க முடியுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி 99 சதவீத கிருமிகளை கொல்வோம் என கழிவறை கிருமிக்கொல்லி நிறுவனங்கள் கூறுகின்றன. அப்போது மீதியுள்ள 1 சதவீத கிருமிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா? 99 சதவீத தூய்மை, பாக்டீரியாக்களைக் கொல்கிறோம் என்று கூறுவது பைத்தியக்காரத்தனமானது. லேபில் செய்யும் ஆய்வு அடிப்படையில் 99 சதவீதம் என்று கூறுகின்றனர். ஆனால் இது வியாபாரத்திற்கான ஐடியா. மற்றபடி உங்கள் குடலை அல்லது தரையை 99.9 சதவீதம் துடைப்பதால் என்ன ஆகப்போகிறது.  நோய் எதிர்ப்பு சக்தி திடமாக இருந்தால், பாக்டீரியா, பூஞ்சைகளைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. எனவே, ஒரு சதவீதம் மட்டுமல்ல; 99.9 சதவீத கிருமிகளைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டியதில்லை.  செய்தி, படம் - பிபிசி

பத்து ஆண்டுகள் கைகழுவாத ஆசாமி

படம்
பீட்டே ஹெக்செத் நன்றி: தி கார்டியன் கிருமிகள் என்பதே பொய்.. ஏறத்தாழ ஓராண்டு அல்ல. பத்து ஆண்டுகள் ஒருவர் கை கழுவ வில்லை என்று கூறியிருக்கிறார். நாம் பாத்ரூம் போனால் கை கழுவுகிறோம். சாப்பிடும்போது கைகழுவுகிறோம். அப்படியானால் கிருமிகள் நம்மை பாதிக்கிறதா இல்லையா? ஃபாக்ஸ் டிவியில் அதிபர் ட்ரம்புக்கு பிடித்த ஷோ, ஃபாக்ஸ் அண்ட் ஃபிரெண்ட்ஸ். ஏன் பிடிக்கும்? வெள்ளை மாளிகையின் அஜெண்டாவுக்கேற்ப நிகழ்ச்சியை நடத்துவார்கள். பேசுவார்கள். அதன் தொகுப்பாளர் பீட்டே ஹெக்செத், மேற்சொன்ன பத்து ஆண்டுகள் கை கழுவாத ஆசாமி. இதைச்சொல்லி ஒட்டுமொத்த உலகையே பீதிக்கு உள்ளாக்கி உள்ளார். கிருமிகள் என்பது உலகில் கிடையாது என்றவர், ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுவது பைப்பில் மது அருந்துவது என கலவையான வினோத விஷயங்களை செய்துவருகிறவர் என அவரது ட்விட்டர் கணக்கு பதிவுகள் நமக்கு சொல்லுகின்றன. உடனே பஞ்சாயத்து தேசிய நோய்த்தடுப்பு மையத்திற்கு வந்தது. அவர்களே வயிற்றுப்போக்கு 40 சதவீதம் வருவதே கை கழுவாத தால்தான் என சத்தியம் செய்திருக்கிறது. ட்ரம்பின் ஆதரவாளர் கூட அறிவியலுக்கு புறம்பாக எப்படி பேசுகிறார் பாருங்கள்...