பத்து ஆண்டுகள் கைகழுவாத ஆசாமி



Pete Hegseth: ‘I don’t really wash my hands ever.’
பீட்டே ஹெக்செத் நன்றி: தி கார்டியன்







கிருமிகள் என்பதே பொய்..


ஏறத்தாழ ஓராண்டு அல்ல. பத்து ஆண்டுகள் ஒருவர் கை கழுவ வில்லை என்று கூறியிருக்கிறார். நாம் பாத்ரூம் போனால் கை கழுவுகிறோம். சாப்பிடும்போது கைகழுவுகிறோம். அப்படியானால் கிருமிகள் நம்மை பாதிக்கிறதா இல்லையா?


ஃபாக்ஸ் டிவியில் அதிபர் ட்ரம்புக்கு பிடித்த ஷோ, ஃபாக்ஸ் அண்ட் ஃபிரெண்ட்ஸ். ஏன் பிடிக்கும்? வெள்ளை மாளிகையின் அஜெண்டாவுக்கேற்ப நிகழ்ச்சியை நடத்துவார்கள். பேசுவார்கள். அதன் தொகுப்பாளர் பீட்டே ஹெக்செத், மேற்சொன்ன பத்து ஆண்டுகள் கை கழுவாத ஆசாமி. இதைச்சொல்லி ஒட்டுமொத்த உலகையே பீதிக்கு உள்ளாக்கி உள்ளார்.

கிருமிகள் என்பது உலகில் கிடையாது என்றவர், ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுவது பைப்பில் மது அருந்துவது என கலவையான வினோத விஷயங்களை செய்துவருகிறவர் என அவரது ட்விட்டர் கணக்கு பதிவுகள் நமக்கு சொல்லுகின்றன.


உடனே பஞ்சாயத்து தேசிய நோய்த்தடுப்பு மையத்திற்கு வந்தது. அவர்களே வயிற்றுப்போக்கு 40 சதவீதம் வருவதே கை கழுவாத தால்தான் என சத்தியம் செய்திருக்கிறது. ட்ரம்பின் ஆதரவாளர் கூட அறிவியலுக்கு புறம்பாக எப்படி பேசுகிறார் பாருங்கள் என அமெரிக்காவில் கிசுகிசு கிளம்பியுள்ளது. சேர்க்கை சரியில்லை போல. உலகில் ஆய்வு ரீதியாக நிரூபித்த உண்மைகளை தடாலடியாக டிவியில் தவறு என ஆதாரமின்றி பேசுவது நிச்சயம் சரியானதல்ல.

நன்றி: தி கார்டியன்.