லவ் இன்ஃபினிட்டி: தங்கத்திற்கு வைரம் கிஃப்ட் பண்ணுவேன்
freepik |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அஷ்ரத், விகாசினி
நட்பதிகாரம் 2
மகாதேவி கிட்ட general Knowledge papers கொடுத்தேன். அது கேட்டது. அது முடிச்சவுடனே உன்கிட்ட கொடுக்கச் சொன்னேன். நீ அதைக் கேட்டு வாங்கிக்கொள்.
இன்னிக்கு உனக்கு தலைவலியா? நலம் விசாரிக்க கூட என்னால் முடியலை. உடம்பைப் பார்த்துக்கொள். அடிக்கடி இறைவனை நினைக்கப் பழகு. எல்லாப் பிரச்னைகளையும் அவர்கிட்ட விட்டுடு. அப்புறம் நான் ஒண்ணு கேட்பேன். கொடுப்பியா?
Prescription நோட்டு ஒண்ணு வேணும். கவிதையெல்லாம் எழுதி வைக்கிறதுக்கு. டைரி பத்த மாட்டேங்குது. நீ வெச்சிருந்தா கொடு!
அப்புறம் தபூ சங்கர் கவிதை படிச்சுப்பாரு.
உன்னை தொந்தரவு பண்ணின மாதிரி இருந்தால் மன்னித்துவிடு. உன்னை விட்டால் வேறு யாருக்கு நான் Lr எழுத முடியும்? இப்படி பக்கம் பக்கமாக எழுதியதை நீதான் அங்கீகரித்து பத்திரப்படுத்துகிறாய்! You're Great Friend in My life.
கடைசியா நம்ம கவி Marriage, உன் Marriage க்கு எல்லாம் நான் பெரிசா Gift பண்ணனும். அப்படின்னு மனசில் ஆசை. அதுக்குள்ள பெரிய ஆளா வந்துட்டா பெரிய அளவில் Gift பண்ணுவேன். கவிகிட்ட சொன்னேன். ஒரு Bookலிருந்த வளையலைக் காட்டி இதுபோல வாங்கித்தருவேன்னு சொன்னேன். அதுக்கு கவி சிரிச்சிக்கிட்டே இது Fulla diamond அப்படின்னுது. ஏன்? diamond உனக்கு வாங்கித் தர மாட்டேனா? என்றேன். வாங்கித்தா பார்க்கலாம். என்று சொன்னது. ஆனால் முடிஞ்ச வரைக்கும் அதுக்கும் உனக்கும் Diamond வாங்கித்தரணும். பார்க்கலாம். அப்போ நான் என்ன நிலைமையில் இருக்கிறேனோ? இப்போ மணி 8.35 எல்லாத்தையும் கொட்டிட்டேன்.
வெட்டிவேறு வாசம் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். நான் வேற LOVE போதையில் உன் மனதை காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடு. உன் Gange ல் எல்லாரும் உன்கிட்ட Love ன்னு டார்ச்சர் பண்றாங்க. நானும் வேற. Sorry Sorry. ஒரு நாள் சாரி கட்டிட்டு வா. நிறைய எழுத முடியல. Next Time பார்க்கலாம்.
அன்புள்ள
மோகன்
காதல் வாசம் வீசும்