வயதானவர்களை காப்பாற்றுமா இளம் ரத்தம்



White and Clear Glass Syringe
pexels.com


வயதானவர்களுக்கு வரும் முதுமைப் பிரச்னைகள், கோளாறுகள், நோய்களை இளைஞர்களிடமிருந்து பெறும் ரத்தம் தீர்க்கும் என ஆய்வுகள் வெளியாகியுள்ளன. எப்போதும்போல இந்த ஆய்வையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர். ரத்தத்தில் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது? இளைஞர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாதான் இதற்கு காரணம்.

பிளாஸ்மா என்பது ர த்தத்தில் உள்ள ஓர் நீர்மம். இதில் ரத்த செல்கள் இருக்காது. ரத்தம் உறைதல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால், வயதானவர்களுக்கு உதவுவது இந்த பிளாஸ்மாதான். ஆனால் இந்த ஆராய்ச்சி எந்தளவுக்கு பயன் தரும், வெற்றி சதவீதம் ஆகியவற்றை அமெரிக்காவின் எஃப்டிஏ கூறவில்லை.

தொற்றுநோய், அலர்ஜி, மூச்சுவிடுதலில் பிரச்னை, இதயநோய்கள் ஆகியவை இம்முயற்சியில் உள்ள ஆபத்துகள். ஆனால் விரைவில் இதற்கான சோதனைகள் தொடங்க உள்ளன.  எஃப்டிஏ, இதுபோன்ற சிகிச்சைகளுக்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசித்துக்கொண்டு செய்யுங்கள் என மக்களை பொறுப்பாக எச்சரித்து விலகிக்கொண்டு விட்டது. இதற்கான சோதனையை இதே அமைப்பு அங்கீகரித்துள்ளது வேறு விஷயம். இத்தகைய சோதனையை செய்யும்போது அரசு அங்கீகாரத்தை மக்கள் சரிபார்த்துக்கொள்வது அவசியம்.

நன்றி: லிவ் சயின்ஸ்


பிரபலமான இடுகைகள்