கடல் உப்பு, டேபிள் சால்ட் என்ன வித்தியாசம்?




Close-Up Of Salt Shaker Spilled On Table
thought.co

பொதுவாக உலகில் பனிரெண்டுக்கும் மேற்பட்ட உப்பு வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமான வகைகள் டேபிள் சால்ட், கடல் உப்பு. இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?


டேபிள் சால்ட், நிலத்தில் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. இதற்கும் கடல் உப்புக்குமான வேறுபாடு, அதிலுள்ள சோடியம் குளோரைடின் சதவீதத்தில் உள்ளது. 90 - 97 சதவீதம் வரை சோடியம் குளோரைடு டேபிள் சால்டில் உள்ளது. 


தூய சோடியம் குளோரைடு என்பது வெள்ளை நிறத்தில் இருக்கும். கடல் உப்பு பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். டேபிள் சால்ட், நீலம், கருநீலம் உள்ளிட்ட நிறங்களில் காணப்படும். 


டேபிள் சால்டில் உள்ள விட்டமின்கள், சத்துக்களில் பிரச்னை கிடையாது. ஆனால் இதன் அளவு அப்படியே இருக்கும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.  பாறையிலிருந்து பெறப்படும் உப்பு, தூயது என்ற நம்பிக்கையில் இதனை சமையல் உப்பாக பயன்படுத்துகின்றனர். இன்று இதன் இடத்தை கடல் உப்பு பிடித்துவிட்டது. 


கடல் உப்பில் சோடியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, சல்பேட், பாசி, பாக்டீரியா ஆகியவை இருக்கும்.   பொதுவாக உப்பில் காணப்படும் வேதிப்பொருட்கள் இவைதான். 


  • 1.Calcium aluminosilicate
  • 2.Calcium carbonate
  • 3.Calcium silicate
  • 4.Fatty acid salts (acid salts)
  • 5.Magnesium carbonate
  • 6.Magnesium oxide
  • 7.Silicon dioxide
  • 8.Sodium aluminosilicate
  • 9.Sodium ferrocyanide or yellow prussiate of soda
  • 10.Tricalcium phosphate
நன்றி: Thought.co