விண்ணரசு என்ஜிஓக்களுக்கு கிடைக்குமா?






Image result for writing



ப்ரீயா பேசுவோம்

என்ஜிஓ எழுத்து


கட்டுரை, நாவல் அனைத்திலும் என்ஜிஓ எழுத்து பிறந்துள்ளது. அப்படி என்றால், இவர்கள் பல்வேறு துறைகளில் எதற்கு வேலை செய்கிறோம் என்றே தெரியாமல் வேலை பார்ப்பார்கள். சிபாரிசு மூலம் நல்ல சம்பளம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் வேலை?

அதெல்லாம் கேட்டால் கஷ்டம்.

பசங்க படம் அனைவருக்கும் பிடித்தாலும் அதில் நல்லவன் கெட்டவன் என்ற தன்மை பலரும் ஆட்சேபித்த ஒன்று. என்ஜிஓ எழுத்தாளர்களும் அப்படித்தான். சூழல் பற்றி எழுதச்சொன்னால், கட்டுரை நெல்மணிகள் அறுத்துவிட்டு வயலில் எறிந்த வைக்கோலைப் போல இருக்கும். சத்தும் இருக்காது. விஷயமும் இருக்காது.

அப்படியே மேற்கத்திய அறிவிலிருந்து தரவிறக்கி எழுதுவது. இதனால் வலுக்கட்டாயமாக எழுதிய உணர்வு கட்டுரைகளை படிக்கும் அனைவருக்கும் இருக்கும். ஏன் நான் கூட அதுபோல செயற்கையாக எழுதிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்து படிக்க டார்ச்சர் செய்திருக்கிறேன். ஆனால் அத்தவறை விரைவில் புரிந்துகொண்டு எழுதும் முறையை மாற்றிக்கொண்டேன்.

ஆனால் இந்த என்ஜிஓ சங்க எழுத்தாளர்கள், தாங்கள் எழுதும் கட்டுரையைக் கூட படிக்க முடியாமல் ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டிக்கன்ஸில் ஆழ்ந்திருப்பார்கள். கட்டுரைகளுக்கு படம் என்ன வைத்திருப்பீர்கள் என்று கேட்டால் உங்கள் விருப்பம் என்று  சொல்லும் துணிச்சலை எங்கள் வார இதழ் ஆசிரியர் கேட்டால் நிச்சயம் கெட்ட வார்த்தையை அந்த இடத்திலேயே பேசுவார்.


தகவல் பிழை ஒன்று கட்டுரையில் இருப்பதை கவனிக்காமல் அவரின் கணினிக்கு அனுப்பிவிட்டேன். முழு ஆசிரியர் குழுவும் அமர்ந்திருக்க, கட்டுரை எழுதும்போது மாஸ்டர் பேஷன் பண்ணாதீங்க. நல்லா வராது என்று திடுக்கென சொல்லிவிட்டார்.

எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைவிட டீமில் இருந்த மற்றவர்கள் பீதி ஆனார்கள். பின்னே மொழிபெயர்ப்புக்கே இந்த கதி என்றால், நேரடி கட்டுரைக்கு சக் யுவர் ஆஸ் எ னசொல்லி விடுவாரோ என பயந்து விட்டனர். ஆனால் அந்த அளவு கடுமையாக எதுவும் நிகழவில்லை. அதனால்தான் எழுதும் கட்டுரை படுமோசமாக வருகிறது.

என்ஜிஓ எழுத்தாளர்களுக்கு முக்கிய வேலை , விழாக்களை ஒருங்கிணைப்பது. எழுதுவது தவிர்த்து பிறந்தநாள், ஹோட்டல் சோறு, டீ குடிப்பது, கிஃப்ட்களை தேர்வு செய்வது  போன்ற வாழ்க்கைக்கு இன்றியமையாத முக்கிய வேலைகளை பிரியமாக செய்வார்கள்.  அவர்களிடம் எழுத்து திறமையை எதிர்பார்த்தால் எப்படி?

ஆனால் இவர்கள் செய்யும் இன்னொரு பிரச்னை. புலி மானை தின்பது இயற்கை என்றால், புலி வில்லன்; மான் ஹீரோ என கதை எழுதுவார்கள். நண்டு உயிருள்ள பொருட்களை சாப்பிடுகிறதா அதுவே வீகன் டயட்டிற்கு மாற எழுத்து வழியாக வற்புறுத்துவார்கள். தன்னை அடையாளப்படுத்த பட்டத்தை கூட தேசிய விளையாட்டாக்க வற்புறுத்தி படக்கதை எழுதுவார்கள். முதல் வாரம் வந்த கதை போலவே என்று சொன்னால் தப்பு தப்பு கன்னம் மீது போட்டுக்கொள்ளுங்கள். என்ஜிஓ எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் ஜீசஸின் வார்த்தைகள்.

நிச்சயம் பொறுமையாக இருங்கள். விண்ணரசு நமக்கு உரியதுதான். கிடைத்துவிடும். அஞ்சாதீர். கைகளை தளரவிடாமல் நம்பிக்கையோடு இரும்.

பின்னே நல்மேய்ப்பன் கிடைக்கவேண்டாமா?

ச.அன்பரசு

நன்றி: பாலகிருஷ்ணன்







பிரபலமான இடுகைகள்