புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்?




Livescience





புற்றுநோயை ஏற்படுத்துகிறதா பாரபீன்?

இன்று ஆர்கானிக் ட்ரெண்டிங்தானே மேட்டர். பலரும் சோப்பில், ஷாம்பூவிலுள்ள பாரபீன் என்ற பெயரைப் பார்த்து டரியலாகி ஆர்கானிக் சோப்பு கிடையாது என பதறி ஓடி கிரிஸ்டல் சோப்புகளாகப் பார்த்து அதிக காசு செலவு செய்து ஆரோக்கியம் காத்து வருகிறார்கள். உண்மையில் பாரபீனில் என்ன பிரச்னை.

“பாரபீன்கள் பாரா ஹைட்ராக்ஸிபென்சோயிக்(PHBA)  என்ற வேதிப்பொருளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கையாகவே கேரட் மற்றும் ப்ளூபெர்ரிகளில் உள்ள வேதிப்பொருள் இது.” என்றார் அமெரிக்கன் வேதிப்பொருள் கௌன்சில் இயக்குநரான கேத்ரின்.

பழங்களிலுள்ள இந்த பாரபீன் எதற்கு உதவுகிறது? நம் உடலிலுள்ள அமினோ அமிலங்களை உடைப்பதற்குத்தான். பாரபீனில் மெத்தில் பாரபீன், எத்தில் பாரபீன், புரொபைல் பாரபீன், புட்டிபாரபீன், ஐசோபாரபீன், ஐசோபுட்டி பாரபீன் ஆகிய வகைகள் உண்டு.

அழகுசாதனப்பொருட்களில் பாரபீன் எதற்குப் பயன்படுகிறது? அதனை பதப்படுத்தும் பயன்பாட்டிற்காகத்தான்.  நாம் சாப்பிடும், பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 90 சதவீதம் பாரபீன் உண்டு. அமெரிக்காவின் எஃப்டிஏ சட்டப்படி லேபிளில் பொறிக்கவேண்டியது கட்டாயம். இந்தியாவிலும் பாரபீன் உள்ளதை கூறுகிறார்கள் என்றாலும் இது உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை முழுமையாக யாரும் கூறவில்லை.

பாரபீன் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்று வதந்தி பரவினாலும் அதனை முழுமையாக கூறமுடியாது.

பாரபீனை உடல் ஹார்மோன் போல ஏற்பதால், மார்பக புற்றுநோய் செல்கள் போல இருந்தாலும் புற்றுநோய்க்கு காரணம் என அதனை குற்றம்சாட்ட முடியாது. காரணம், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போல பாரபீன் செயல்படுகிறது. உண்மையில் புற்றுநோய் உந்துதல் ஏற்படுத்தும் காரணியாக பாரபீனை இதுவரை வலுவாக சொல்லும் ஆய்வுகள் வெளிவரவில்லை என்பதே உண்மை. 

நன்றி: லிவ்சயின்ஸ்


பிரபலமான இடுகைகள்