இறப்புக்கு காரணம் டீசல்!




உலகம் முழுவதும் தோராயமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டில் பாதிக்கப்பட்டு மரணத்தை சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பான அமெரிக்க ஆய்வு வெளியாகி அதிர்ச்சியூட்டி உள்ளது. காற்று மாசுபாடு மக்களின் சில நோய்களுக்கு காரணம் என்பது பொதுவாக பலரும் அறிந்ததே. ஆனால் முழுமையாக ஒருவரின் இறப்புக்கு காரணம் என்று ஆய்வறிக்கை திடமாக கூறுவது அதிர்ச்சியாகத்தானே இருக்கும். 


எண்ணிக்கையில் 3 லட்சம், உலகளவில் 40 சதவீதம் என டீசல் இஞ்ஜின்கள் மனிதர்களை பலிவாங்கி வருகின்றன. பொதுவான சதவீதம் என்று கூறினாலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த அளவு 66 சதவீதமாக உள்ளது. இன்டர்நேஷ்னல்  கௌன்சில் ஆன் க்ளீன்(ICCT) என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். 


2015 ஆம் ஆண்டு இந்த அமைப்பும், அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இணைந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மீது மாசுபாட்டு குற்றத்தைக்கூறி(2015) நிரூபித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. 


ஐரோப்பாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஊறு விளைவித்துவருவது டீசல் இஞ்ஜின்கள் ஆகும். மாசுபாடு குறித்த சரியான கொள்கைகள், விதிகள் விதிக்கப்படாவிட்டால் இச்சூழ்நிலை இன்னும் மோசமாகும் என எச்சரிக்கிறார் ஆய்வு அமைப்பின் துணை எழுத்தாளரான ஜோசுவா மில்லர். 

இதில் விவசாயம், தொழில்துறை சாராத வண்டிகளின் மாசுபாட்டு அளவும் கருத்தில் கொள்ளப்பட்டது. உலகளவில் பதினொரு சதவீத வாகனங்கள் 3.4 மில்லியன் மரணங்களுக்கு காரணம் என்ற புள்ளிவிவரங்கள் வெளியாக, சூழலியல் துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. 

இந்த மாசுபாட்டு இழப்புகள் மூலம் அரசுகளுக்கு ஏற்பட்ட இழப்பு  1 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும். 

நன்றி: Phys.org

பிரபலமான இடுகைகள்