கருவூல உண்டியல் பத்திரம் தெரியுமா?




Image result for treasury bills india
Quora




பொருளாதாரம் அறிவோம்

2

கருவூல உண்டியல்

இந்திய அரசு வெளியிடும் டி.பில்கள் அல்லது கருவூல உண்டியல் என்பவை, குறுகிய கால கடன் உபகரணமாகும். இவற்றை 91, 182,364 என மூன்று காலகட்டங்களில் இப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை ஜீரோ வட்டிவிகிதப் பத்திரங்கள் ஆகும்.

91 நாட்கள் கொண்ட ரூ.100 மதிப்பிலான பத்திரம் ரூ.98.20 க்கு விற்கப்படும். கழிவு என்பது ரூ.1.80 வழங்கப்பட்டாலும் மதிப்பு என்பது ரூ.100க்குத்தான். வாரம்தோறும் புதன்கிழமை, கருவூல உண்டியல் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் ஏலமிடப்படுகின்றன.
91 நாட்கள் காலம் கொண்ட கருவூல உண்டியல் பத்திரங்கள் வாரம்தோறும் புதன்கிழமையும், 182, 364 நாட்கள் காலம் கொண்ட பத்திரங்கள் ஒருவாரம் விட்டு புதன்கிழமை ஏலத்திற்கு ஏற்கப்படுகின்றன.

பத்திரங்களுக்கான பணம் அனுப்பீடு தொடர்பான வேலைகள் ஏலம் முடிந்தபின்னர் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஏலம் தொடர்பான செய்திகளை ரிசர்வ் வங்கி தன் பத்திரிக்கை வெளியீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கிறது.

சரஸ்
நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி