பிரிவினையைத் தூண்டும் தாக்குதல்கள்

Students protests in Sopore, Srinagar against attacks on Kashmiris outside valley
globalvoices.org






காஷ்மீரில் நாற்பது ராணுவ வீர ர்கள் வெடிகுண்டு தாக்குதலில் இறந்தனர். நிச்சயம் இது வருத்தப்படவேண்டிய  நிகழ்ச்சிதான். அதற்காக காஷ்மீர் இளைஞர்கள் முழுவதும் இந்த சம்பவத்துக்கு காரணம் என அடித்து விரட்டினால் மக்கள் எங்கே போவார்கள்?

பாஜக தனது கரசேவகர்களை சரியாகப் பயன்படுத்தி இந்த சம்பவத்தின் மூலமே ஆட்சியைப் பிடிக்க தயாராகி வருகிறது. எப்போதுமே தேர்தலுக்கு முன் ஓரிடத்தில் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவது ஆரஞ்சுக் கட்சியின் வழக்கம். தற்போது டேராடூன், பஞ்சாப், ஜம்மு ஆகிய இடங்களில் மாணவர்கள் அரசின் இரும்பு பிடியில் மாட்டியுள்ளனர்.

இதுதான் வாய்ப்பு ஆர்எஸ்எஸ் குண்டர்கள் படை முஸ்லீம்களை தாக்க தொடங்கியுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த ஜாவித் அகமது கான் என்பவரை வந்தே மாதரம் சொல்லச்சொல்லி மூக்கில் குத்தி தாக்குதலை நடத்தியுள்ளது வலதுசாரி குண்டர்கள் படை. இதேபோல நாடெங்கும் காஷ்மீரிகள் உள்ள இடத்தில் அவர்களை குறிவைத்து தாக்கத்தொடங்கியுள்ளது இந்து குண்டர்கள் படை.

ஏறத்தாழ இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு வெற்றிதான். முஸ்லீம்களைக் கொண்ட பாகிஸ்தானாக அவர்கள் இருக்கையில், நாம் இந்துஸ்தானாக மாறாவிட்டால் எப்படி?

தாக்குதல், வன்முறை ஆகியவற்றில் ஐஎஸ்ஐக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் எவ்வித வேறுபாடுகளும் கிடையாது. ஐஎஸ்ஐ தொடங்குவதை ஆர்எஸ்எஸ் செய்துமுடிக்கும். அதாவது, ஐஎஸ்ஐ நினைக்கும் ரிசல்ட்டை தன் மூர்க்க முட்டாள்தனத்தால் ஆர்எஸ்எஸ் செய்து முடிக்கும்.

நன்றி: குளோபல்வாய்சஸ்.ஆர்க்



பிரபலமான இடுகைகள்