காதல் காமம் 2
SF |
ஒருமுறை பார்த்தாலே காதல் வரும் என்பது உண்மையா?
இதுமாதிரி மேஜிக் எல்லாம் நடப்பது இயல்புதான். இயல்பாகவே நாம் ஒருவரைப் பார்க்கிறோம். ஏதோ ஒரு விஷயம் நம்மை ஈர்க்கிறது. நட்பாகிறோம் இல்லை, பரிசல் கிருஷ்ணா சிறுகதை போல நீ ரொம்ப ஸ்பெஷல்டா என கொஞ்சுகிறோம் ஏதாவது நடந்தால்தானே வீக்எண்டிற்கு பிளான் செய்ய முடியும்.
சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து சோதித்தனர். கறுப்பு வெள்ளை புகைப்படங்களை நிறையப்பேரிடம் கொடுத்தனர். அவர்களின் கண்களின் அசைவு எப்படி இருக்கிறது? படங்களில் எந்த உறுப்புகளை கவனிக்கின்றனர் என சோதித்தனர். அவர்கள் தமக்கு பிடித்த படங்கள் என்று கூறிய படங்களில் அவர்களின் கண்களின் முகம், கைகால் என எக்ஸ்ரே போல மேய்ந்தன. ஆண், பெண் பேதம் எல்லாம் செக்ஸ், காதலுக்கு கிடையாது. பெஸ்ட் நமக்குத்தான் கிடைக்கணும் என்கிற வெறிதான் இதற்கு காரணம்.
மனிதர்களுக்கு செக்ஸ் என்பதற்கு ஏன் சீசன் கிடையாது?
நாய், பூனை, சிம்பன்சி என அனைத்துக்கும் காதல் செய்ய கட்டிப்புரள நேரமுண்டு. ஆனால் மனிதர்களுக்கு ஏன் இருபத்திநான்கு மணிநேர சேவையை ஆண்டவன் விதித்தார்?
காரணம் விலங்குகளின் இனப்பெருக்க காலத்தை பார்த்தீர்கள் என்றால் அனைத்தும் உணவுப்பொருட்கள் அதிகம் கிடைக்கும் காலமாக இருக்கும். ஸோ, வயிறு நிறைஞ்சாத்தான் எல்லாம். ஆனால் மனிதர்களுக்கு அதுபோல நெருக்கடி எப்போதும் உண்டுதான். ஆனால் அதெல்லாம் பார்த்தால் கர்லான் பெட்டை கசக்குவது எப்படி என டெராபைட்டில் பொய்களை அடுக்கி பாய்ந்து விடுகிறார்கள். முடியாதவர்கள் போட ஒரு பொண்ணு வேணும் என அசோக்நகரில் போஸ்டர் ஒட்டி, கிழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கோடையில் காதல் பொங்குமா?
சிக்கன் சாப்பிட்டால்தான் எனக்கு ஷார்ட்ஸ் நனைந்துவிடுகிறது மச்சான் என்று நண்பர் மீகா வாட்ஸ் அப் அனுப்பியிருந்தார். அது புரதம் செய்யும் வேலை விடுங்கள்.
பிரெஞ்சில் ஒரு ஆய்வை செய்தார்கள். சூரியன் பப்பரப்பா
சொல்லி கிளம்பி வரும்போது ஐந்து துடிப்பான இளைஞர்களை விட்டு தெருவில் வரும் பெண்களிடம் போன் நம்பர்களை கேட்க வைத்தனர். பிற நாட்களை விட சுரீர் வெயிலில் 22 சதவீத பெண்கள் நம்பர்களை கொடுத்துவிட்டனர். ஆனால் மேகம் சூழ்ந்த குழப்பமான சூழலில் 14 சதவீத பெண்கள் மட்டுமே நம்பர்களை தந்தனர்.
காரணம், ஈஸி. மெலடோனின், செரடோனின் ஆகிய ஹார்மோன்கள் சும்மா வெயிலில் ஜிவ்வென ஏறி வேகம் காட்டுவதால் காதல் மேஜிக் நடக்கிறது.
நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்