லவ் இன்ஃபினிட்டி: இது காதலா? நட்பா?




Stone Artwork
Pexels.com




லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அஷ்ரத், விஜயாசௌந்தரம்





Woman Sitting on Bench Outdoors
Pexels.com





நட்பதிகாரம் 1

16.7.2002

செல்வா எங்க வீட்டுக்கு வந்தான். சந்தோஷமாக இருந்தது. நீ Yuvaraj கிட்ட எதுக்கு பேசின! எனக்கு சரியான கோபம். Tension ஆயிட்டேன். என்னால நீ யார்கிட்ட பேசினாலும் பிடிக்காம போயிடுது ஏன்னு தெரியல. நீ என்கிட்ட மட்டும் பேசணும்னு நினைக்கிறது தப்புதானே?

யதார்த்தம் தெரிந்தபோதும் I Can't Control Myself. நீ யாரையுமே Love  பண்ணலைன்னு தெரிஞ்சப்பவே ஏதோ வானத்துல பறக்கிற மாதிரி இருந்தது. நீ Phone பண்ண நினைத்தாய் என்றால் சுதாகர் வீட்டுக்கு பண்ணு. நம்பர் 24853 -914204. leave  நாளில் மத்தியானத்துக்கு மேல அங்கதான் இருப்பேன். ஏதாவது முக்கியம்னா பண்ணு. சுதாகரின் அக்கா பேரும் உன்னுடைய பேரும் ஒண்ணுதான். அவங்க அக்கா பேரு கவிதா எப்படி?

நீ இப்போ ஒரு Gold Chain போட்டிருக்கிறாய். அது ரொம்ப ரொம்ப அழகா இருக்குது. நீ மூக்கும் முழியுமா அழகா இருக்கே. சுருக்கமாக நீ ரொம்ப அழகா இருக்கே!

எனக்குப் புடிச்ச Songs

”தொட்டுத்தொட்டு செல்லும் ஐஸ்காற்றே” (ஏய் நீ.ரொ.அ.இ)
“வத்தல குண்டு வெத்தல கொடியே”
”ஆல்தோட்ட பூபதி நானடா”
அப்புறம் துள்ளுவதோ இளமை , பஞ்சதந்திரம் பார்த்துட்டேன். து.இ நல்லா இருந்தது. ஷெரீன் So Sweet.

முக்கியமான Matter

S.பூங்கொடி வீட்டுக்கு நம்ம Class பொண்ணுங்க பொங்கலுக்கு போயிருக்காங்க. அங்க Roopa வை பார்த்து, நான் உங்கிட்ட பேசறது, பழகறது எல்லாம் சொல்லியிருக்காங்க.
போனவாரம் நான் College விட்டு வந்தப்ப பஸ் stop ல் Roopa நின்னுது. வீட்டுக்கு கூட்டிட்டு போனேன். ஒரு அரைமணிநேரம் இருந்த து. நான் உங்கிட்ட பேசாம இருக்கணும். ஒழுங்கா இருக்கணும் நல்லாப்படி அப்படி இப்படின்னு சொல்லுச்சு. உன்மேல வெறுப்பு மாதிரி நம்ம Class பொண்ணுங்க நிறைய சொல்லியிருக்காங்க.





Image result for love triangle
Puzzle Warehouse


நீ ஒரு Book கொடுத்தாய். அந்த Story  ரொம்ப நல்லாயிருந்தது.

“தொடாமல் மலர முடியாது.
காற்று தென்றல் காற்று
தொடாமல் மலர முடியாது
மலரலாம் ஆனால் மௌனமாக”

வினயா, ப்ரணவ், அஜய் எல்லாம் Original  கதாபாத்திரங்கள் மாதிரி நம்ம Life ல் நடந்தது போல இருந்தது. கண்டிப்பா வினயா = நீ. கடைசியா சொல்றா வினயா. ஒரு பொருளை ஒரு பொண்ணை விரும்பற உரிமை யாருக்கும் உண்டு. அது கிடைக்காம போனாலும் நாம எப்பவும் போல இருக்கணும்னு பேசறா. I Like This Lines.

Kavi எனக்கு Dress  எடுத்து கொடுத்துது. நிறைய Advise பண்ணிச்சு. College  விட்டு வந்ததிலிருந்து தேங்காய் கூட சுடாமல் (இன்னிக்கு ஆடி1) உனக்கு Lr எழுதறேன். இன்னிக்கு Maths Tutuion  போகலை.  Tuition போனா வீட்டுக்கு வர நைட்  9.50  ஆயிரும். வர வர இந்த College Life Very Torchure. ச்சேன்னு இருக்குது.

இந்த Note ல் நான் ரெட் கார்ட்டில் பூ ஒன்று வைத்துள்ளேன். பத்திரமா வெச்சிரு. இந்தப்பூ எனக்கு ரொம்ப பிடிக்கும். மோகனாவுக்கு பிடிக்குமான்னு கேட்டுப்பாரு. என்னோட குணநலன்(?) ஏதாவது மோகனாகிட்ட இருக்குதா?  என்னோட Taste  ஏதாவது இருக்குதா? பார்!

நீ வேணா மோகனா Birthday அன்னிக்கு Leave சொல்லிட்டு 'M' வீட்டுக்கு வர்றியா. நீ வர்றமாதிரி இருந்தா நானும் வர்றேன். 

(நட்பும் காதலும் மணம்வீசும்)