பதப்படுத்தப்பட்ட உணவுகள் - பர்ச்சேஸ் வழிகாட்டி




ஃபிரிட்ஜில் வைக்க ஏற்றவை


Dried Beans and Lentils

அப்படியே பிரிட்ஜில் வைக்கலாம். சில பொருட்களில் விட்டமின்கள் இழப்பாகும் என்பது உண்மைதான். ஆனால் பத்து ஆண்டுகள் வரை தாங்கும் திறன் கொண்டவை ட்ரைடு பீன்ஸ். 

நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ஸ், விட்டமின்கள், மினரல்ஸ் ஆகியவை அப்படியே இருப்பதால் பல்க்காக ஷாப்பிங் செய்து சந்தோஷமாக இருக்கலாம். 

Frozen Berries


காசு கொஞ்சம் அதிகம்தான். ஆனால் மதிப்புள்ள பொருள். நீங்கள் ஃப்ரெஷ்ஷாக இருக்கும் பெர்ரிகளைப் போல தரத்தில் உறைந்த பெர்ரிகளை வாங்கலாம். சத்துக்கள் பெரியளவு குறையாது. யுஎஸ்டிஏ அறிக்கைப்படி ஆறு மாதங்களுக்கு பெர்ரிகளை பயன்படுத்தலாம். இதய நோய்களை குறைக்க, நீரிழிவை நசுக்கு, மனநலப் பிரச்னைகளை துரத்த பயன்படுத்த வேண்டிய பொருள். 

 Frozen Meat and Poultry

காய்கறிகளை விட இறைச்சி மிக விரைவாக பாக்டீரியாக்கள், பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டு விடும். எனவே அதனை உப்புக்கண்டம் போட்டு ஃபிரிட்ஜில் வைப்பதே சிறந்தது. கோழியின் இறக்கைகளை ஒன்பது மாதங்களும், கறியை ஒரு ஆண்டும் பயன்படுத்தலாம் என்று யுஎஸ்டிஏ பரிந்துரைக்கிறது.

நன்றி: ecowatch.com

 

பிரபலமான இடுகைகள்