ஃபேஸ்புக்குக்கு வயசு 15 ஆச்சு!
ஃபேஸ்புக்குக்கு வயது 15
ஃபேஸ்புக் நம் வாழ்க்கைக்குள் நுழைந்த பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. மார்க் ஸூக்கர் பெர்க் ஃபேஸ்புக்கை மக்கள் வாழ்க்கையில் தொடர்புகளை ஏற்படுத்திய பெருமை கொண்டதாக கருதுவதாக கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் உண்மையில் பதினைந்தாம் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதே உண்மை. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா பிரச்னையில் இருந்தே மார்க் இன்னும் வெளியே வரவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றை கையகப்படுத்தியது நல்ல முடிவு. ஆனால் தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கின் பிராண்ட் அடிபட்டுப்போய் செனட்டில் விசாரணை வரை வந்தது மார்க்கிற்கு பெரிய அடி.
ஆனால் அதேசமயம் அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக சொன்ன முதல் சமூக வலைதளம் ஃபேஸ்புக்தான். இதிலேயே பல்வேறு நண்பர்களின் குழுக்கள் ஆக்கப்பூர்வமும், பெரும்பாலோர் அக்கப்போர் செய்துவருவதும் உண்மைதான்.
கொலம்பியாவில் நடந்த வன்முறைகளை ஃபேஸ்புக்கின் நியூஸ் ஃபீட் அம்பலப்படுத்தியதை யாரும் மறக்கமுடியாது. மக்கள் குழுக்களாக தங்களுக்குள் பேச ஃபேஸ்புக் உதவியது. மாற்றங்களைக் கொண்டுவரவும் முக்கியப்பங்காற்றியது என்று மார்க் பேசியது அத்தனையும் உண்மையே.
உலகம் முழுக்க இருநூறு கோடிப்பேருக்கு மேலாக ஆக்டிவ்வாக ஃபேஸ்புக்கில் செயல்பட்டு வருகின்றனர். தற்போது ஃபேஸ்புக்கின் வருமானம் 22 பில்லியன்களிலிருந்து 55 பில்லியன்களாக மாறியுள்ளது.
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்