அமெரிக்காவை குழப்ப மாயத்தோற்ற ஆயுதம்






ஃப்யூச்சரிசம்




எதிரிகளை குழப்பும் மாயத்தோற்ற ஆயுதம்


ரஷ்யா ஏற்கெனவே பனிப்போர் கால ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப்போவதாக அறிவித்துவிட்டது. இதில் ட்ரம்ப் முந்திக்கொண்டு முன்னதாகவே போர் ஒப்பந்த விதிகளை ரஷ்யா பலமுறை மீறிவிட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்கா விரைவில் ஒப்பந்தத்திலிருந்து விலகும் என ட்விட்டர் வேகத்தில் பேசிவிட்டார்.

ஒருவகையில் ஆயுத வியாபாரிகளுக்கு இருநாடுகளின் போர் வேகம் மகிழ்ச்சி தந்திருக்கும். ஏனெனில் போர் பயத்தில் பல்வேறு நாடுகளும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி ஆயுதங்களை வாங்குவார்கள் அல்லவா?  அமைதியைக்கூட அணு ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு பேசும் நிலைமை.


இப்போது ரஷ்யாவின் கடற்படை எதிரிகளை குழப்பும், மாயத்தோற்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. ஆர்ஐஏ நோவோஸ்தி எனும் ஊடகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆயுதத்தின்  பெயர் ஃபிளின். இந்த ஆயுதத்தை இயக்கும்போது இரவில் பார்க்கும் சக்தி கொண்ட  சாதனங்களையும் குழப்பி மாயத்தோற்றங்களை உருவாக்குமாம். சில தன்னார்வலர்கள் இதனை சோதித்தபோது 20 சதவீதம் பேர் குழம்பித் தவித்துள்ளனர்.

நன்றி: ஃப்யூச்சரிசம்

பிரபலமான இடுகைகள்