லவ் இன்ஃபினிட்டி: இது காதலா? நட்பா?
pexels.com |
கல்லூரியில் ஒரு சின்ன நொடி நேரம் கூட நீங்கள் காதல் வயப்பட்டிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. நாள்பூராவும் புத்தகத்தை இல்லை லைப்ரரியை கட்டி அழுதிருப்பீர்கள் என்றால் கல்லூரியை வீணடித்திருக்கிறீர்கள் என உறுதியாக சொல்வேன்.
இங்கு கூறப்படும் கடிதமும் அப்படித்தான். இதிலுள்ள உணர்ச்சிகரமான குழப்பங்கள், பிரச்னைகள் வேறுவிதமானவை. நீங்களே வாசியுங்கள்.
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: அஷ்ரத், சேதுமாதவ் பாலாஜி
Pexels.com |
Dearest Friend,
நீ எப்படித்தான் இப்படியெல்லாம் இலக்கியமாய் எழுதறயோ? அப்புறம் நான் ரொம்ப பெருமைப்படற விஷயம் ஒண்ணு நடந்தது. இந்த Note ஐ நான் Bus -ல் படிச்சிட்டு வந்தேன். என் பக்கத்தில் 1st year பொண்ணு இருந்தா. எங்க கூட படிச்ச பெண். 1 Year late Join பண்ணியிருக்கா. நீ கொடுத்த புத்தகங்கள் படிக்கையில் உன்னைப் பற்றி சொல்லியிருக்கேன். இன்னிக்கு லெட்டரைப் படிக்கும்போது, அவள் இருந்தா. அவ படிக்க மாட்டா, பார்க்க மாட்டான் நினைச்சேன். ஆனா 'Love' ங்கற word அவ கண்ணில் பட்டிருச்சு. உடனே என்னிடம், 'தப்பா நினைக்காதே , நீங்க ரெண்டு பேரும் Lovers'- ஆன்னு கேட்டா. நான் அப்படியெல்லாம் இல்லை. Close friends அவ்வளவுதான்னு சொன்னேன். உடனே நான் இந்த மாதிரி Friends பார்த்ததில்லை. Keep it up ன்னு சொன்னா.
அப்புறம் நம்ம கிளாஸ் Pramilaவுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். எப்படி நீ Kumar ஐ Friend பிடிச்சே. அவன் ரொம்ப நல்லவன்னு சொன்னா. So உன்னால் என் பெருமை அதிகரிச்சிட்டே போகுது.
சரி, நான் உன் Hair ஐ பத்தி எதுவும் சொல்லமாட்டேன். ஆனா நல்லா இருந்தா சொல்லலாம் இல்லியா? நான் உன்னை மாதிரி Change ஆகிட்டே இருக்கேன். சில விஷயங்களில்.
சிலசமயங்களில் அமைதியா இருக்கேன். சில நாட்களில் குறும்பு செய்கிறேன். இது ரொம்ப Jolly யா இருக்கு.
இரண்டு முறை Kavi க்கு போன் பண்ணினேன். Line கிடைக்கல. அப்புறம் Love பத்தி.
நிஜம்மா Love னா எனக்குப் புரியல. எங்க அம்மா, அப்பா கூட Love Marriage. ஆனா ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. படறாங்க. ஆனா என்னை மட்டும் ரொம்ப Stricta நடத்தறாங்க. அப்பா, அம்மா கஷ்டப்படறதப் பார்த்துத்தான் எனக்கு love ங்கறதே வரலையோ அல்லது பிடிக்கலையோ?
(அப்புறம் என்னாச்சு அப்புறம் படிப்போம்)