என் கையை விட்டுவிடு: மயிலாப்பூர் டைம்ஸ்






Man's Hand in Shallow Focus and Grayscale Photography
Pexels.com











மயிலாப்பூர் டைம்ஸ்


என் கையை விட்டுவிடு



ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு, நான் உன் துன்பங்களிலிருந்து காப்பாற்றுவேன். 




நேற்று சாலையை நானும் சகாவுமான பாரதியும் கடந்தோம். மை ஹோட்டலுக்கு மினி டிபன் சாப்பிட பாரதி அழைத்தார் என வந்தேன். பாரதி, ஏதோ மஃப்டி போலீஸ் போல வெள்ளைச் சட்டையும், காக்கி பேண்டும் போட்டு ராட்சஷ உடம்பில் பயமுறுத்தினார். பேசினால்தானே தெரியும் பாஸ் எப்படின்னு. நான் புதுசா வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டபிள் ஏட்டய்யாவை சுற்றுவது போல அவர் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்து இல்லை ஓடிக்கொண்டு இருந்தேன். சாலை கடக்கும்போது முன்னால் வேகமாக போக, நான் அவரின் அட்டாச்மென்டாக பின்னால் நடந்தேன். ஆனால் அந்த வேகம் போதாமல் அவரின் கையைப் பிடித்து டோ போட முயற்சித்தேன். சட்டென திரும்பியவர், அயோக்கியப் பயலே கையை இழுக்கறியே, கையை விடு எப்படி ரோட்டை கிராஸ் பண்ணுவேன் என மூர்க்கமானார்.

பயப்படாதீர், தைரியமாக இரும். 


எனக்கு என்னடா இது. ஏதோ பொண்ணு கையப்பிடுச்சு இழுத்தமாதிரியில்ல டென்ஷன் ஆகறாருன்னு அப்படியே நின்றேன்.

அதில்லடா தம்பி. திடீர்னு கைய பேக்குல இழுத்தேன்னு வையு வண்டி நம்மள சாய்ச்சுட்டு போயிரும் அதுக்குத்தேன் என பொங்கலை சவைத்தபடி பேசினார். மை ஹோட்டல் ஸ்பெஷாலிட்டி சல்லீசு ரேட்டில் சோறு. அறுபத்தைந்து ரூபாயில் அற்புதமான சோறு கிடைக்கும். ஆனால் அப்படி ருசியாகவொண்ணும் இருந்து தொலையாது. ஆனால் டிபன் ஐட்டங்கள் பரவாயில்லை.


கையைவிட்டுவிடு என்பதை நான் மேகாத்து எழுத்தாளருக்கு சொல்லியிருக்கிறேன். அப்போது டிசைன் படித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் காலேஜ் முடித்துவிட்டு பலரும் எம்பிஏ, எம்சிஏ, என தாவிக்கொண்டிருக்க, எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒவ்வொரு வேலைக்கும் நான் காரணங்களை கண்டுபிடித்து மிஷன் இம்பாசிபிள் சொல்லிக்கொண்டிருந்தேன். இறுதியாக அம்மா, சாமி பொட்டாட்ட கம்ப்யூட்டர் சென்டர் வெச்சிரேன் என சொல்லும்போதுதான் எனக்கு வயிறு அப்படி ஒரு கலக்கு கலக்கியது. உடனே பாத்ரூமுக்கு பாய்ந்தேன்.

உடனே அனிமேஷன் படிக்க விவரங்களைத் திரட்டத் தொடங்கினேன். அப்படி வந்து படிக்கும்போது எனது சகோ செய்த சதிகளால் சோறு கூட சாப்பிட ஒரு கட்டத்தில் காசு இல்லை. சகோ நேர்மையானவர். தனக்கு தேவையான விஷயங்களை தி.நகர் ஆபீசில் சாப்பிட்டு வந்துவிடுவார். நான் சாப்பிட காசு கேட்டால் ஈஷா திருநீறு கிண்ணத்திலிருந்து டைம்ஸ் வாங்க தேவையான காசைக் கொடுப்பார். நான் கேட்டது, மதியச்சோறுக்கான பணம். அப்பாகிட்ட காசு கேளுடா, இங்க தங்கறதுக்கு நீ பணம் கொடுக்கணும் தெரியுமா?  ஆடிட்டர் லெவலுக்கு பேசுவான். ஆனாலும் குண்டி தேயப் படித்து, பரீட்சையில் பெயிலானான். அதனால்தான் பிற வங்கிகள் திவால் பிரச்னையிலிருந்து தப்பித்தன.

அப்போதுதான் மேகாத்து எழுத்தாளர் அறிமுகமானார். நன்றாக பேசுவார். அறிவுரை சொல்லுவார். ஆனால் என்ன? அவரது கதைகளைப் பற்றி விமர்சனம் சொன்னால் அவரது குடும்பத்தினரையே தனக்கு கேடயமாக்குவார். இந்த குழப்பங்களுக்கு இடையே அவரது மகனுக்கு அறிவுரை சொல்வது போல பரிசு தர ஐடியா கொடுத்தேன். நிலைய வித்வானாக சகோ இருக்க கவலை வேண்டாம்தானே!

எழுதியதை எடிட்  செய்தேன். ஆனால் பிரின்ட் எடுக்க கையில் காசில்லை. சோற்றுக்கே பதிலாக பத்து ரூபாயில் சன்பீஸ்ட் ஸ்பெஷல் மட்டுமே என் உணவாக அப்போது மாறி இருந்தது. சகோ, டஜன் காதலிகளோடு ராஜாராம் முந்திரியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் காசு கேட்க, திருநீர் பெட்டியைப் பார்த்தார. அதில சகோ வின் கவிதையை எடிட் செய்துவிட்டேன். பிரிண்டுக்கு மேகாத்து எழுத்தாளரே காசு கொடுத்தார். பிரிண்டை  எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றேன். போட்டோவைப் பார்த்தவர், அடப்பாவி என் பையனை நான் கைவிடணும்னு சொல்றயா? என பீதியானார்.


அமெரிக்க பாணியில் வாழும் குடும்பம் என்பதால், தெலுங்கு சினிமா போல அதிக சென்டிமெண்ட காட்சிகள் நமக்கு கிடையாது. ஆனால் என் கையைவிட்டுவிடு என்பது பாரதி சொன்னதும் அத்தனை நிகழ்ச்சிகளும் வேகமாக என் மனதில் ஓடியது உண்மை. நெருங்கிய உறவு என்பது அமைவது மிக கஷ்டம். அதற்கு நிறைய அக்னிப் பரீட்சைகளை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.

அப்பா, அண்ணன் என்றல்ல பலரும் வழிகாட்டவேண்டிய நேரத்தில் விளக்கெண்ணெய் பூசியது போல மாறி தன்னுடைய நலன்களை மட்டுமே பார்த்தால் உறவுக்கு என்ன மதிப்பிருக்கிறது?




பிரபலமான இடுகைகள்