மேஜிக் பஸ் சாதித்தது எப்படி?




Image result for magic bus ngo





மேஜிக் பஸ் சாதித்தது எப்படி?

1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேஜிக் பஸ் என்ஜிஓ அமைப்பு, குழந்தைகளுக்கு ஆளுமை தொடர்பான வகுப்புகளை எடுப்போடு அவர்களுக்கு கல்வி மூலம் வறுமையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ இருபது ஆண்டுகால பணியில் 3,75,000 குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சாதித்துள்ளது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம்.


இந்தியா, மியான்மர், நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிற அமைப்பு இது. அதன் இயக்குநர் ஜெயந்த் ரஸ்தோகியிடம் பேசினோம்.

கல்வியை அளித்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் எப்போது வந்தது?

முதலில் எங்கள் பணியை மும்பையின் குடிசைப்பகுதிகளில்தான் தொடங்கினோம். குறிப்பாக, இந்தியாவில் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக பயனளித்துள்ளது. அதனால்தான் எங்கள் கல்வித்திட்டத்தை விளையாட்டுடன் இணைந்ததாக உருவாக்கினோம். நீங்கள் இந்தியாவிலுள்ள எந்த கிராமத்துக்கும் கால்பந்தை எடுத்துக்கொண்டு செல்லலாம். பாடநூலை விட கால்பந்து நிறைய மக்களை, குழந்தைகளை நம்முடன் ஒன்றாக இணைக்கிறது.
சிறுவர்கள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது வரை படிக்கவேண்டும். அடுத்து, குழந்தை திருமணத்தை தவிர்ப்பது, மூன்றாவது, வறுமையிலிருந்து அவர்களை மீட்பது ஆகியவையே எங்கள் லட்சியம். 
ஒரு குழந்தைக்கு முன்னர் ரூ.1200 கட்டணம் வாங்குவதாக  கூறினீர்கள். தற்போது இத்தொகை அதிகரித்துள்ளதா?
இப்போது தோராயமாக ரூ. 1800 ஆக உள்ளது. கட்டணம் என்பதை விட அதிக விஷயங்கள் எங்கள் நிகழ்ச்சியில் உண்டு. இங்கு 500 மில்லியன்களுக்கும் மேற்பட்ட பிரச்னைகளை நாங்கள் தீர்க்க முயன்று வருகிறோம். ஒருங்கிணைத்து முயன்றால் இந்தியாவிலுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு.
வேலை வாய்ப்பின்மை இந்தியாவில் அதிகரித்து வருகிறது இதற்கு மேஜிக் பஸ் என்ன தீர்வு வைத்திருக்கிறது?
பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களை அணுகி வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு பெற்றுத்தந்து வருகிறோம். பத்தாவது மற்றும் பனிரெண்டாவது முடித்தவர்களுக்கு திறமையை மெருகேற்றி ஆளுமையை மேம்படுத்தி வேலைக்கு தகுதிபடுத்துகிறோம். 

நன்றி: லிவ் மின்ட்

பிரபலமான இடுகைகள்