லவ் இன்ஃபினிட்டி: என்னை ஏன் நம்ப மறுத்தாய்?
pexels.com |
லவ் இன்ஃபினிட்டி
குமார் சண்முகம்
தொகுப்பு: ச.அன்பரசு
வரிகளை மடக்கி எழுதினால் கவிதை என்று உலகம் பார்க்கும் என்பதை புரிந்துகொண்டபோது இப்படி எழுதினேன்.
எப்படி மாற்றுவேன்?
புது வீடு
எல்லாமே புதுசாய்
என்னால் எடுத்துப்
போக முடிந்தது
நீயில்லாத வாழ்க்கையையும்
நிசப்தமான மனசையும்தான்.
புது வீட்டைக் காட்டிலும்
பழைய வெளிச்சம் குறைந்த
இருளான மழை ஒழுகும்
நீ வந்து போன
நீ ஒளிந்து ஓடி விளையாடிய
நீ தலை இடித்துக்கொண்ட தாழ்வாரம்,
நீ நடந்த சுவடுகள் அழியாமல் இருக்கும் என்
பழைய வீடு அற்புதமானது.
வீடு மாற்றிக்கொள்ளலாம்
மனசை எப்படி மாற்ற?????
அடுத்தவர்கள் ஆயிரம் சொல்லி கெடுக்க நினைக்கலாம்
நீ எப்படி நம்பலாம்?
என்மேல் சந்தேகம் எப்படி வரலாம்?
உனக்கு அவள் தோழி
எனக்கு அவள் யாரோ?
நல்லவர்களுக்கு தீமை விளையும்போது
தடுக்க நினைப்பதும், தடுப்பதிலும் தவறில்லை
பாம்புக்கு பால் வார்த்தால்?
அதனால்தான் அனைத்தும் அறிந்தும்
அமைதியாக இருக்கிறேன்.
நாம் தப்பு செய்தால்தானே பிரச்னை வருகிறது?
அவள் உப்பு தின்றாள், தண்ணீர் இப்போதுதான் குடிக்கிறாள். அவ்வளவுதான்.
அதிகமாக ஆட்டம் போட்டால் இப்படித்தான் அவஸ்தைப்படணும் ஓகே. அடுத்தவங்க Problem பத்தி பேசினா நமக்குள் ஏன் சண்டை வரணும்.
யார் Lr, Board ல எழுதறது அப்படின்னு எல்லாம் கொஞ்சம் தெரியும். யாரையும் காட்டிக் கொடுப்பதால் என் மனது வேதனைதான் படும். ஒருநாள் வேணா உங்கிட்ட சொல்றேன். மோகனா மாதிரி நல்லவங்க பக்கத்திலே உட்கார்ந்து பழகறே. அப்புறம் ஏன் உன் மைண்ட் இப்படி Think பண்ண முடியுது.
உன்மேல் கோபம் இருந்தது. இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம்னு பேசினயில்ல, அதுக்காக. இப்ப அதெல்லாம் மறந்துட்டேன்.
எப்பவும் யாராவது உன்னைப் பத்தி தப்பாக சொன்னால் நான் நம்ப மாட்டேன். அப்படி நம்பி சந்தேகப்பட்டதால் விளைந்த விளைவுகளால் அதிகம் காயம்பட்டவன் நான். உனக்கே நல்லா தெரியும். அதுக்கப்புறம் என்னால் சாப்பிடக்கூட முடியலை. ஒழுங்கா தூங்க முடியலை. ரொம்ப ரொம்ப ஒல்லியாகிட்டேன். மனசு பூரா கவலை. இப்போ கொஞ்ச நாளாத்தான் ஏதோ மனம் அமைதியாக இருக்குது. மறுபடியும் என்னை மாற்றிவிடாதே ப்ளீஸ். யார் இப்படி உன் மனசைக் கெடுக்கிறது?
(காதல் மணம் வீசும்)