இடுகைகள்

அருஞ்சொல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் சொற்களை அறிந்துகொள்வோம்!

படம்
  சூழல் சொற்கள் பயோஃப்யூல்ஸ் (Biofuels) தாவரத்திலிருந்து பெறும் திரவ அல்லது வாயு வடிவ எரிபொருள். எடு.மரம், மரக்கழிவுகள், விவசாயக் கழிவுகள், திடக்கழிவுகள், எத்தனால் கலந்த எரிபொருட்கள்  பயோஜியோகெமிக்கல் சைக்கிள் (Biogeochemical Cycle) பூமியின் இயக்கத்திற்கு பங்களிக்கும் வேதிப்பொருட்களின் சுழற்சி. கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ் ஆகியவை இந்தவகையில் முக்கியமான வேதிப்பொருட்களாகும்.  பயோமாஸ் (Biomass) உயிரின பல்திரள் அளவு. இயற்கையில் இருந்து கிடைக்கும் உயிருடன் அல்லது உயிரற்ற பொருட்கள் என கூறலாம். எடு.மரம், பயிர்கள், விலங்கு, விலங்கு கழிவுகள் பயோஸ்பியர் (Biosphere) உயிர்க்கோளம். பூமியில் உள்ள அனைத்து சூழல் மற்றும் உயிரினங்களை உள்ளடக்கிய தொகுதி. எ.டு.நிலம், கடல் சார்ந்து வாழும் உயிரினங்கள்.   பிளாக் கார்பன் ஏரோசோல் (Black Carbon Aerosol) கரிம எரிபொருட்கள், உயிரி எரிபொருட்கள்  ஆகியவற்றின் மூலம் வெளியாகி, சூரிய ஒளியை ஈர்க்கும் கார்பன் துகள்கள். 

சூழல் தொடர்பான அருஞ்சொற்களின் தொகுப்பு !

படம்
  அருஞ்சொல்.... கிளைமேட் சேஞ்ச் (Climate Change) குறிப்பிட்ட காலகட்டத்தில் அளவிடப்படும்  காலநிலை மாற்றம். இதில் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று ஆகியவை உள்ளடங்கும்.   கிளைமேட் ஃபீட்பேக் (Climate Feedback) காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யும் செயல்முறைகள்.  கிளைமேட் லேக் (Climate Lag) காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மெதுவாக நடப்பது. வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, வெப்பமயமாதல் பாதிப்பை மெதுவாக ஏற்படுத்துகிறது. இதற்கு 25 முதல் 50 ஆண்டுகளாகும்.  கிளைமேட் மாடல் (Climate Model) கணித முறைகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைக் கணக்கிட காலநிலை மாதிரி (Climate Model) உதவுகிறது. எ.டு: பருவக்காலங்களில் ஏற்படும் புயல்களை முன்னமே அறிந்து நிலச்சரிவு ஆபத்தை தடுப்பது. கிளைமேட் சென்சிடிவிட்டி (Climate Sensitivity) வளிமண்டலத்தில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு அதிகரித்தபிறகு பூமி வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ந்துள்ளதா என அளவிடுவது.  https://polarpedia.eu/en/climate-lag/ https://www.climate.gov/maps-data/climate-data-primer/predicting-climate/climate-models

புவியியல் துறையில் அறிய வேண்டிய சொற்கள் இவைதான் !

படம்
  1.அப்ராசியன் (Abrasion) நீர்ப்போக்குவரத்து காரணமாக கனிமங்களைக் கொண்ட பாறை அரிக்கப்படுவது 2.அபிஸல் பிளெய்ன்  ( abyssal plain) கடலில் 2 முதல் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடல் படுகை 3.அலைன்மென்ட் (alignment) கனிமத் துகள்கள் பாறையில் அமைந்துள்ள திசைவரிசை 4.ஆல்கா (Algae) சுருக்கமாக பாசி. இவை, கடலில் வாழும் தாவர இனங்களாகும். இதில் பெரும்பாலானவை நுண்ணோக்கியில் பார்த்தால் தான் தெரியும்.  5.அலுவியல் ஃபேன் (Alluvial fan) முக்கோண வடிவில் அமைந்துள்ள வண்டல் மண் படிவுகள். மலைகளில் உருவாகி வரும் ஆறுகளால் இப்படிவுகள் உருவாகின்றன.  6.ஆண்டெசைட் (Andesite) பெருமளவில் சிலிகா கொண்ட கருப்பு, சாம்பல் நிறமான எரிமலை பாறை வகை.  7.ஆங்குலர் (Angular) ஆற்றின் வழித்தடத்தில் உள்ள கற்கள் வட்டவடிவில் அல்லாமல் கூரிய விளிம்புகளோடு இருப்பது. 8. ஆன்டிகிளைன் (anticline) பாறை அடுக்கில் ஏற்படும் வளைவான அமைப்பு 9.ஆஷ் வல்கனோ (ash volcano) எரிமலை வெடிப்பிலிருந்து வெளியாகும் பாறைகளின் நுண்ணிய துகள். சுருக்கமாக சாம்பல். 10. அட்ரிஷன் (Attrition) பாறைகள்  ஒன்றோடொன்று மோதி, அதன் வடிவம் சிறியதாக மாறுவது.  தகவல் https://www.geolsoc

சூழல் சொற்களுக்கான அர்த்தம் அறிவோம்!

படம்
  அருஞ்சொல் Albedo சூரியனின் கதிர்வீச்சு பொருளின் மீது அல்லது பரப்பின் மீது எந்தளவு படுகிறது என்பதைக் குறிக்கும் அளவு. வானியலில் அதிகம் பயன்படுகிறது.  Alternative Energy சூரியன், காற்று, நீர் ஆகிய இயற்கை வள ஆதாரங்களிலிருந்து பெறும் ஆற்றல் Anthropogenic மனிதர்களின் செயல்பாட்டால் இயற்கையில் ஏற்படும் மாறுதல் அல்லது பாதிப்பு. பொதுவாக, மனிதர்களால் உருவாகும் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.  Atmosphere பூமியின் வளிமண்டலம். காற்றிலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட் உள்ளிட்ட வாயுக்களைக் குறிப்பிடுகிறது.  Atmospheric Lifetime வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் ஒருமுறை வெளியானால், வளிமண்டலத்தில் பல்லாண்டுகள் இயக்கத்தில் இருக்கும். எடு. கார்பன் டை ஆக்சைட்  அப்சார்ப்ஷன் (Absorption) உறிஞ்சுதல். ஒரு பொருள் இன்னொரு பொருளை தனக்குள் ஈர்த்துக்கொள்வது. எ.டு. கரிம எரிபொருட்களால் உருவாகும் நைட்ரஜன் டையாக்சைட், சூரிய ஒளியில் நீலநிற ஒளியை ஈர்ப்பது. ஆசிட் (Acid) பிஹெச்  அளவுகோலில் எண் 7க்கும் குறைவாக உள்ள பொருள். நீ