புவியியல் துறையில் அறிய வேண்டிய சொற்கள் இவைதான் !




 









1.அப்ராசியன் (Abrasion)

நீர்ப்போக்குவரத்து காரணமாக கனிமங்களைக் கொண்ட பாறை அரிக்கப்படுவது

2.அபிஸல் பிளெய்ன்  ( abyssal plain)

கடலில் 2 முதல் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடல் படுகை

3.அலைன்மென்ட் (alignment)

கனிமத் துகள்கள் பாறையில் அமைந்துள்ள திசைவரிசை

4.ஆல்கா (Algae)

சுருக்கமாக பாசி. இவை, கடலில் வாழும் தாவர இனங்களாகும். இதில் பெரும்பாலானவை நுண்ணோக்கியில் பார்த்தால் தான் தெரியும். 

5.அலுவியல் ஃபேன் (Alluvial fan)

முக்கோண வடிவில் அமைந்துள்ள வண்டல் மண் படிவுகள். மலைகளில் உருவாகி வரும் ஆறுகளால் இப்படிவுகள் உருவாகின்றன. 

6.ஆண்டெசைட் (Andesite)

பெருமளவில் சிலிகா கொண்ட கருப்பு, சாம்பல் நிறமான எரிமலை பாறை வகை. 

7.ஆங்குலர் (Angular)

ஆற்றின் வழித்தடத்தில் உள்ள கற்கள் வட்டவடிவில் அல்லாமல் கூரிய விளிம்புகளோடு இருப்பது.

8. ஆன்டிகிளைன் (anticline)

பாறை அடுக்கில் ஏற்படும் வளைவான அமைப்பு

9.ஆஷ் வல்கனோ (ash volcano)

எரிமலை வெடிப்பிலிருந்து வெளியாகும் பாறைகளின் நுண்ணிய துகள். சுருக்கமாக சாம்பல்.

10. அட்ரிஷன் (Attrition)

பாறைகள்  ஒன்றோடொன்று மோதி, அதன் வடிவம் சிறியதாக மாறுவது. 


தகவல்

https://www.geolsoc.org.uk/ks3/gsl/education/resources/rockcycle/page3451.html


கருத்துகள்