குரோசோம்களின் எண்ணிக்கை உயிரினங்களைப் பொறுத்து மாறுபடும்! ஜே.வி. சமாரி

 














பரிணாம வளர்ச்சி உயிரியலாளர் 

ஜேவி சமாரி (JV Chamary
)

அனைத்து உயிரினங்களும் குரோமோசோம்கள் கொண்டிருக்குமா?

ஆம். எளிமையான செல் அமைப்பைக் கொண்ட பாக்டீரியா, வட்ட வடிவிலான குரோமோசோம் அமைப்பைக் கொண்டிருக்கிறது. சிக்கலான செல் அமைப்பைக் கொண்டுள்ள உயிரினங்கள் அதிக குரோமோசோம்களைக் கொண்டுள்ளன என்று கூறமுடியாது. ஜேக் ஜம்பர் என்ற ஆண் எறும்பு, ஒரே ஒரு குரோமோசோமைக் கொண்டுள்ளது. ஆனால், ஒற்றைச் செல்லைக் கொண்டுள்ள அமீபா போன்ற ஸ்டெர்கீலா (sterkiella) என்ற உயிரி 16 ஆயிரம் குரோமோசோம்களை கொண்டுள்ளது. 

உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை  மாறுபடுவது ஏன்?

உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை அதன் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தது. மனிதக்குரங்குகளின் உடலில் 48 குரோமோசோம்கள் என்றால் அதிலிருந்து வளர்ச்சி பெற்ற மனிதர்களின் உடலில் மொத்தம் 46 குரோமோசோம்கள்தான் உள்ளன. நமது உடலில் தேவையான குரோமோசோம்கள் கூடுதலாக இருந்தால் அல்லது  இல்லாமல் போனால் புற்றுநோய் ஏற்படும். டவுன்  சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில், 21 குரோமோசோம்கள் மூன்று நகல் பிரதிகளாக இருக்கும். 

அனைத்து உயிரினங்களிலும் குரோமோசோம்கள் ஜோடியாக இருக்குமா?

இல்லை. பொதுவாக குரோமோசோம்கள் ஜோடியாக உள்ளன. குரோமோசோம்களின் ஜோடிக்கு பிளாய்டி (ploidy) என்று பெயர். ஒரு ஜோடி குரோமோசோம்களை கொண்டுள்ள செல்களுக்கு ஹாப்லாய்ட் (Haploid)என்று பெயர். இரண்டு ஜோடி குரோமோசோம்களை கொண்டிருந்தால் அதற்கு டிப்லாய்ட் (Diploid)என்று பெயர்.  பெரும்பாலான விலங்குகள் டிப்லாய்டாகவும்,தாவர இனங்கள் பாலிபிளாய்ட் வகையிலும் வரும். 

தேனீ, எறும்புகளை ஹாப்லோடிப்லாய்டு (Haplodiploid) என்று அழைக்கலாம். இதில் ஹாப்லாய்ட்  எனும் ஆண், கருவுறாத முட்டையிலிருந்தும், டிப்லாய்ட் எனும் பெண் கருவுற்ற முட்டையிலிருந்தும் உருவாகிறது.



BBC Wildlife 

https://www.jvchamary.com/about/

கருத்துகள்