ஆய்வகத்தில் பாதுகாப்பாக ஆய்வுகளை செய்வதற்கான முன்னெச்சரிக்கை முறை!

 












ஆய்வகத்தில் பாதுகாப்பு!

மாணவர்கள் ஆய்வகத்தில் அறிவியல் சோதனைகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க உதவும் முன்னெச்சரிக்கை குறிப்புகள்தான் இவை. 

பாதுகாப்பு கண்ணாடிகள் (Safety Googles)

திரவ வடிவில் உள்ள  வேதிப்பொருட்களைக் கையாளும்போது, அவை குழாய்களிலிருந்து வெளியே சிதறும் வாய்ப்புகள் அதிகம். இச்சூழலில், மாணவர் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்திருப்பது அவசியம். 

பன்சன் பர்னர்ஸ் (Bunsen burners)

பன்சன் பர்னரைப் பயன்படுத்தும்போது, அருகில் நிறைய பொருட்களை வைக்கக் கூடாது. நெருப்பு சுடரில், மாணவரின்  தலைமுடி படாமல் கவனித்துக் கொள்வது முக்கியம். தீச்சுடரில் எத்தனால், ஆல்கஹாலை எப்போதும் சூடு செய்யக்கூடாது. 

சோதனைக்குழாய் (Test tube)

சோதனைக் குழாய்களை சூடுபடுத்தும்போது, அவற்றை கிளாம்ப் கருவி (Clamp) கொண்டு பிடிக்கவேண்டும். மேலும் சூடு தாங்கும் கையுறைகளையும் பயன்படுத்தலாம். கண்ணாடி குடுவைகளை எப்போதும் மேசையின் மையப்பகுதியில் வைத்திருப்பது அவசியம். 

கெமிக்கல் ஃப்யூம் ஹூட் (Chemical Fume Hood)

ஆபத்தான வேதிப்பொருட்களை சோதனைக் குழாய்களில் வைத்து சோதிக்கும்போது, எழும் புகை வெளியே செல்ல கெமிக்கல் ஃப்யூம் ஹூட்டைப் பயன்படுத்தலாம். 


கருத்துகள்