சூழல் பற்றிய விழிப்புணர்வால் மக்கள் பயன் பெறுவார்கள்! பிரபு பிங்காலி, பொருளாதார பேராசிரியர்

 







சூழலில் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை!

பிரபு பிங்காலி, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புது டில்லியில் இயங்கும் டாடா கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார். 

உணவு அமைப்பு முறைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தியது எது?

வேளாண்மையில்  உணவு உற்பத்தி, விளைபொருளை விவசாயிகளிடமிருந்து பெறுவது, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். இதில், நாம்  போதிய கவனம் செலுத்துவதில்லை. விவசாயி, விளைபொருள், விற்கும் சந்தை, உணவுப்பொருட்களுக்கான தேவை, நகரங்களின் உணவு நுகர்வு, உணவின் தரம், ஊட்டச்சத்துகள் என உணவு அமைப்பு முறை, ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது. 

காலநிலை மாற்றங்களால் இந்தியா எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கிறது?

வங்கம் - பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் நெல், கோதுமை ஆகிய பயிர்கள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பீகார் என சென்றால், அங்குள்ள கிராமங்களின் வறுமையையும் அறியலாம். வெப்பமயமாதல் அதிகரித்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சிறுகுறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மெல்ல, பயிர் உற்பத்தி குறைந்து உணவுப்பாதுகாப்பு சிதையும். அரசின் பொதுவிநியோக முறையை நம்பியுள்ள ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள். 

இப்பிரச்னைக்கு தங்களின் தீர்வுகள் என்ன?

நெல், கோதுமை விளைச்சல் குறைவாக உள்ள இடங்களில், வெப்பம் தாங்கி வளரும் வேறு பயிர்களை பயிரிடலாம். பாசனநீர், உரம் ஆகியவற்றை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும்.  தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவிகள் வேளாண்துறைக்கு தேவை.  

நுகர்வோர்களான மக்கள் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா?

நிச்சயமாக. மக்கள், தாம் வாங்கும் உணவுப்பொருட்கள் பற்றிய கேள்விகளைக் கேட்கலாம். அதன் மூலம் வேதி உரங்களற்ற,கார்பன் வெளியீடு குறைந்த பொருட்களைப் பெறலாம். சூழல் விழிப்புணர்வு பெற்ற மக்களால் இது சாத்தியமாகலாம். 


TOI

Climate change will impact food production consumers can help establish timely adaptations (srijana mitra)

Prabu pingali

https://dyson.cornell.edu/faculty-research/faculty/plp39/

https://ceres2030.org/prabhu-pingali-biography/

https://tci.cornell.edu/


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்