தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர்! கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல்

 









கிரிஸ்டியன் கான்ராட் ஸ்பிரேங்கல் (Christian konrad sprengel
1750 -1841)




ஜெர்மனியின் பிராண்டன்பர்க் நகரில் பிறந்தார். பெற்றோர், எர்னஸ்ட் விக்டர் ஸ்ப்ரேங்கல், டோரோதியா ஞாடன்ரெய்ச்.  1770ஆம் ஆண்டு ஹாலே பல்கலைக்கழகத்தில் இறையியல், மொழியியல் பாடங்களைப் படித்தார். 1780ஆம் ஆண்டு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில், தாவரவியல் பற்றி படித்துக்கொண்டிருந்தார். தாவரங்களில் நடைபெறும் மகரந்தச்சேர்க்கையை மேம்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

கல்விப்பணி மற்றும் மத ரீதியான செயல்பாடுகளை தாவரங்களை ஆராய்ச்சி செய்வதற்காக குறைத்துக்கொண்டார்.  1793ஆம் ஆண்டு கான்ராட் வெளியிட்ட தாவரவியல் நூலில் 461 தாவர இனங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இதில் 1000க்கும் மேற்பட்ட பூக்களின் ஓவியங்கள் இருந்தன. 1794ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகம், கான்ராடை  ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியது. அறிவியலாளர்கள் கான்ராடின் ஆராய்ச்சியை பெரியளவு அங்கீகரிக்கவில்லை. 1841ஆம் ஆண்டு சார்லஸ் டார்வின், கான்ராடின் ஆராய்ச்சியை ஏற்றுக்கொண்டார். பின்னரே அறிவியலாளர்கள் கான்ராடை ஏற்று அங்கீகரித்தனர். 

https://www.encyclopedia.com/people/science-and-technology/horticulture-biographies/christian-konrad-sprengel

கருத்துகள்