இடுகைகள்

டைட்டானியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவில் சுரங்கம்!

படம்
  நிலவில் சுரங்கம் நிலவில் கால்வைத்து சாதனை செய்து இன்று சூரியன் வரை ஆராய சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் நிலவு மீதான ஆராய்ச்சி மோகம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. நிலவில் நமக்குத் தேவையான என்ன விஷயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என பார்ப்போம்.  சிலிகான் நாம் பயன்படுத்தும் போன் திரை முதற்கொண்டு பயன்படும் முக்கியமான வேதிப்பொருள். நிலவில் கிடைக்கும் தூசி துப்புகளை தட்டியெடுத்து சுத்திகரித்தால் சிலிகான் பிரச்னை தீர்ந்துவிடும். இதனைப் பயன்படுத்தி சோலார் பேனல்களை தயாரித்து ஆற்றலைப் பெருக்கலாம்.  அரிய உலோகங்கள் பூமியில் நாம் சுரங்கங்கள் மூலம் சிரமப்பட்டு பெறுவது 17 அரிய உலோகங்கள். இவைதான் போன் முதல் பேட்டரி வரை நாம் பயன்படுத்த உதவுகின்றன. பாஸ்பரஸ் முதல் பொட்டாசியம் வரை நிலவில் கிடைப்பது உறுதியானால், அங்கேயே சென்று தங்குவது சுலபம். பிளாட்டினம் வகையறா உலோகங்கள் கிடைத்தால் ஃபேஸ்மேக்கர் கருவிகளை செய்வது எளிதாகிவிடும்.  நீர் பூமியில் குறைந்து வரும் நீர், நிலவின் துருவப்பகுதிகளில் உள்ளது. 2.9 பில்லியன் மெட்ரிக் டன்கள் நீர், கிடைத்தால் குடிநீராகவும், விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். இதிலிர