நிலவில் சுரங்கம்!

 



Fantasy, Moon, Girl, Night, Bank, Light, Sky, Young



நிலவில் சுரங்கம்

நிலவில் கால்வைத்து சாதனை செய்து இன்று சூரியன் வரை ஆராய சென்றுவிட்டனர். இப்போது மீண்டும் நிலவு மீதான ஆராய்ச்சி மோகம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. நிலவில் நமக்குத் தேவையான என்ன விஷயங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என பார்ப்போம். 

சிலிகான்

நாம் பயன்படுத்தும் போன் திரை முதற்கொண்டு பயன்படும் முக்கியமான வேதிப்பொருள். நிலவில் கிடைக்கும் தூசி துப்புகளை தட்டியெடுத்து சுத்திகரித்தால் சிலிகான் பிரச்னை தீர்ந்துவிடும். இதனைப் பயன்படுத்தி சோலார் பேனல்களை தயாரித்து ஆற்றலைப் பெருக்கலாம். 

அரிய உலோகங்கள்

பூமியில் நாம் சுரங்கங்கள் மூலம் சிரமப்பட்டு பெறுவது 17 அரிய உலோகங்கள். இவைதான் போன் முதல் பேட்டரி வரை நாம் பயன்படுத்த உதவுகின்றன. பாஸ்பரஸ் முதல் பொட்டாசியம் வரை நிலவில் கிடைப்பது உறுதியானால், அங்கேயே சென்று தங்குவது சுலபம். பிளாட்டினம் வகையறா உலோகங்கள் கிடைத்தால் ஃபேஸ்மேக்கர் கருவிகளை செய்வது எளிதாகிவிடும். 

நீர்

பூமியில் குறைந்து வரும் நீர், நிலவின் துருவப்பகுதிகளில் உள்ளது. 2.9 பில்லியன் மெட்ரிக் டன்கள் நீர், கிடைத்தால் குடிநீராகவும், விவசாயம் செய்யவும் பயன்படுத்தலாம். இதிலிருந்து ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை பிரித்தெடுக்க முயன்றால், செவ்வாய் செல்வதற்கான ராக்கெட்டுகளில் எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். 

டைட்டானியம்

நிலவின் தூசிகளில் எட்டு சதவீத டைட்டானியம் கிடைக்கிறது. இல்மினெட் வடிவிலுள்ள இதனைத் தூய்மை செய்தால் ஆக்சிஜன் மற்றும் இரும்பு ஆகியவையும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அலுமினியம், நிலவில் 18 சதவீதம் நிறைந்துள்ளது. விமானங்கள், விண்கலங்கள், கட்டடங்கள், மருத்துவப் பொருட்கள் செய்ய அலுமினியம் உதவுகிறது. எரிபொருளாகப் பயன்படும் ஹீலியம் வாயுவையும் இதில் பயன்படுத்தலாம். 

நன்றி: பாப்புலர் சயின்ஸ்

 


 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்