மக்களின் வாழ்க்கையிலிருந்து சுகாதாரத்தை தனியாக பிரித்துப் பார்க்காதீர்கள்! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

 

 

 

Nirmala Sitharaman replaces Swadeshi bahi khata with ...

 

 

 

நிர்மலா சீதாராமன்


நிதியமைச்சர்


ஜவுளிபூங்கா பற்றி அறிவித்திருக்கிறீர்கள், இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?


ஜவுளிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் திறன் கொண்ட நாடாக உள்ளோம். ஆனாலும் கூட இத்துறையில் நாம் பலவீனமாக இருக்கிறோம். அதில் நாம் முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதற்காகவே ஜவுளி பூங்காவை அறிவித்திருக்கிறோம்.


பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கான நிறைய முயற்சிகள் உள்ளன. ஆனால், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகள் ஏதும் இதில் கூறப்படவில்லை. பெருந்தொற்று காரணமாக பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் போய்விட்டன. நீங்கள் எப்படி அவர்களுக்கு உதவப் போகிறீர்கள்?


ஆத்மாநிர்மார் பாரத் திட்டத்தை அறிவித்தபோது, நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை திரும்ப வேலையில் சேர்த்துக்கொள்ள ஏதுவாக அரசு அவர்களின் பிஎப் பணத்தை கட்டும் என்று கூறினேன். இந்த தொகையை அரசு இரண்டு ஆண்டுகள் செலுத்தும். ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கவிருக்கிறோம். இந்திய மக்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பல்வேறு நாடுகளுடன் இணைந்து பயிற்சி பெற்று திறன்களை வளர்த்துக்கொள்ளலாம். இதில் மொழிப்பயிற்சியும் கூட உண்டு.


இந்தியாவில் தனியார் வங்கிகளை துணிச்சலாக தனியார்மயமாக்கினார்கள். ஆனால் இப்போது அதனை தனியார் மயமாக்கும் முடிவை கூறியுள்ளீர்கள். அரசியல்ரீதியாக அந்த முடிவை எதிர்த்து இப்படி அறிவித்திருக்கிறீர்களா?


இதற்கு பின்னால் சரியான காரணம் இருக்கிறது. நாங்கள் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாக கூறவில்லை. உண்மையை சொல்லவேண்டுமென்றால் எஸ்பிஐ வங்கிகள் நிறைய நாடெங்கும் தேவைப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகள் சில சிறப்பாக உள்ளன. பிற வங்கிகளின் செயல்பாடு அந்தளவு நன்றாக இல்லை. நான் அந்த வங்கிகள் பற்றிய தகவல்களை இப்போது சொல்லவிரும்பவில்லை. இந்த வகையில் தனியார் வங்கிகள் இதுபோன்ற பல்வேறு விஷயங்களை சிறப்பாக செயல்பட்டு முன்னேறி வருகின்றன. அதனால்தான் அவற்றை தனியார் வங்கிகளுக்கு விற்க நினைக்கிறோம்.


தொழில்துறைக்கு நீங்கள் என்ன செய்தியை சொல்லவிரும்புகிறீர்கள்?


அரசு இனிவரும் காலங்களில் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகளை செய்யாது. அப்படி செய்துவந்தாலும் அதனை குறைத்துக்கொள்ளலாம். எனவே தனியார் நிறுவனங்கள், தங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படலாம். முதலீடுகளை துணிந்து செய்யலாம்.


கொரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாயை அறிவித்திருக்கிறீர்கள். இது இந்த ஆண்டுக்கு மட்டும்தானா?


ஆமாம். நீங்கள் கூறிய தொகை இந்த ஆண்டுக்கு மட்டும்தான். இத்திட்டத்திற்கு இன்னும் அதிகம் தொகை தேவை என்றாலும் கூட அதனை விரைவில் ஒதுக்குவேன்.


அரசு பல்வேறு செலவுகளுக்கு அதிக தொகை ஒதுக்கியுள்ளதைப் பார்ப்பவர்கள் இதனை சுகாதாரத்திற்கான பட்ஜெட் என்கிறார்களா?


சுகாதாரம் என்பதை மனிதர்களின் வாழ்விலிருந்து தனித்துப் பிரித்துப் பார்க்கவில்லை. கிராமத்தில் உள்ள மக்களுக்கான குடிநீர், சுகாதாரத் திட்டங்கள் முக்கியமானவை. மருத்துவமனைகளை உருவாக்குவதை விட இதை முக்கியமானதாக நான் கருதுகிறேன். கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்னர் இரண்டு ஆய்வகங்கள்தான் இருந்தன. அவற்றில்தான் நாம் மாதிரிகளை சோதிக்க வேண்டும். இன்று 200 மையங்களை உருவாக்கியுள்ளோம். மக்களின் மாதிரிகளை இனிமேல் எளிதாக சோதிக்க முடியும்.


இந்துஸ்தான் டைம்ஸ்


ஆர்.சுகுமார், அஜய் மிஸ்ரா



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்