கடல் பகுதியில் வாழும் வைரஸ்கள்!
கடல் வைரஸ்கள்!
கடற்கரையில் நீச்சலடித்து குளிக்கும்போது, கடல்நீரை நீங்கள் குடிக்காமல் இருக்கமுடியாது. அந்த நீரில் இரண்டு லட்சம் கிருமிகள் வாழ்வதாக ஆய்வாளர் குழு கூறியுள்ளது.
நீரில் நுண்ணுயிரிகள் வாழ்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் அவற்றின் எண்ணிக்கை பற்றி பலரும் ஆர்வம் கொண்டது 2015 ஆம் ஆண்டுதான். அப்போது, கடல் ஆராய்ச்சிக்குழு ஒன்று, 5,476 என்ற எண்ணிக்கையிலான வைரஸ்கள் கடல் நீரில் இருப்பதாக கண்டறிந்து கூறியது.
அடுத்த ஆண்டே அக்குழு, கடல் நீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 222 என்று அறிவித்தது. தற்போது இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. பனிரெண்டு சதவீத அதிக வளர்ச்சி இது.
இது அழகான பிரமிக்க வைக்கும் ஆய்வு என்றார் நார்த் கரோலினா க்ரீன்ஸ்போரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நுண்ணுயிரி வல்லுநர் லூயிஸ் மேரி போபே. உலகம் முழுக்க எழுபது சதவீதமுள்ள கடல்நீரை ஆராய்வது சாதாரண காரியம் அல்ல. 2015 -2016 ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதிகளில் 43 இடங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது.
தாரா ஓசேன் ப்ராஜெக்ட்டில் கிடைத்த நாற்பது சதவீத நுண்ணுயிரிகள் ஆர்க்டிக் பகுதிகளைச் சேர்ந்தவை. இவை தவிர கிடைத்த பிற நுண்ணுயிரிகள் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். நாங்கள் வைரஸ்களின் மரபணுக்களை பொருத்திப் பார்த்து அதனை பட்டியலில் இணைக்க முடிவு செய்துள்ளோம் என்றார் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தின் (பெல்ஜியம்) நுண்ணுயிரி உயிரியலாளர் ஆன் கிரிகோரி. வைரஸ்களை பட்டியலிடுவது மிகவும் சிரமம் காரணம், அவற்றின் டிஎன்ஏக்களை அவை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக்கொள்வதுதான். வைரஸ்கள் முழுக்க உயிரோடு உள்ள உயிரி என்பதிலேயே ஆய்வாளர்கள் பலருக்கும் சந்தேகம் உள்ளது. வைரஸ்களின் டிஎன்ஏ அடிப்படையில் பட்டியலிட்டு 2 லட்சம் வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
மனிதர்களை அல்லது பாக்டீரியாவை பிரிப்பது போல வைரஸ்களை பிரித்து பட்டியலிடவில்லை. ”தட்பவெப்பநிலை என்பது வைரஸ்களைக் கண்டுபிடிக்க பெரியளவு உதவுகிறது” என்கிறார் ஓஹியோ பல்கலைக்கழக பட்டதாரி மாணவரான அஹ்மத் ஸாயத். ஆர்டிக் பகுதி பல்லுயிர்த்தன்மை கொண்டது உண்மை. அதேபோல இதன் தன்மை வெப்பமயமாதலால் வேகமாக மாறிவருகிறது.
தற்போது கடலில் வாழும் நீரிலுள்ள 40 சதவீதம பாக்டீரியாக்களை வைரஸ்கள் தாக்கி அழிக்கின்றன. மனிதர்கள் உருவாக்கும் கார்பனை உறிஞ்சியுள்ள பாக்டீரியாக்களின் மேலோடு உடையும்போது அதிலுள்ள கார்பன் மெல்ல வெளிப்படுகிறது. இது கடலின் ஆழத்தில் நிகழ்வதாக சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
-ச.அன்பரசு
https://www.quantamagazine.org/scientists-discover-nearly-200000-kinds-of-ocean-viruses-20190425/?mc_cid=ef3cd6a6b0&mc_eid=bb206e334b
கருத்துகள்
கருத்துரையிடுக